Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் சீசன் 4 - காதலில் விழப் போவது யார் ?

06 அக், 2020 - 12:13 IST
எழுத்தின் அளவு:
This-time-who-fall-in-love-in-Biggboss-show

பிக்பாஸ் நான்காவது சீசன் ஆரம்பமாகி, முதல் நாளே சண்டையுடன் ஆரம்பமாகிவிட்டது. இன்னும் உள்ள 100 நாட்களில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சண்டையை வரவழைத்து விடுவார் பிக்பாஸ் என்பது உறுதி.

அதுபோல யாராவது இளம் ஜோடிகளுக்கு இடையே காதல் உருவாவதற்கும் அவர் காரணமாக இருப்பார். முதல் சீசனிலிருந்தே அப்படியான காதல் நாடகங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

முதல் சீசனில் ஆரவ் - ஓவியா, இரண்டாவது சீசனில் மகத் - யாஷிகா ஆனந்த், மூன்றாவது சீசனில் கவின் - லாஸ்லியா என காதல் ஜோடிகளை திட்டமிட்டே உருவாக்கினார்கள். அவர்களது காதல் நாடகங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே முடிந்து போனது.

இந்த வருட சீசனில் இளம் போட்டியாளர்களாக ரம்யா பாண்டியன், ஷிவானி, கேப்ரியலா, சனம் ஷெட்டி, ஆஜித், பாலா ஆகியோர் உள்ளனர். கேப்ரியலா, ஆஜித் வயதில் குறைந்தவர்களாகத் தெரிகிறார்கள். அதனால், அவர்களை இந்த காதல் நாடகத்திற்குள் இழுக்க மாட்டார்கள். ஆக, ஆண்களில் பாலா மட்டுமே 'எலிஜிபிள் பேச்சிலர்' ஆக மிஞ்சியிருக்கிறார். அவருடன் காதலில் விழப் போவது ரம்யா பாண்டியனா, ஷிவானியா, சனம் ஷெட்டியா என்பது அடுத்த சில வாரங்களில் தெரிந்துவிடும்.

காதல் நாடகம் இல்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியா?. சீக்கிரமே நடக்கும் பாருங்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குணசித்ர நடிகைகளுக்கு நல்ல படம்  அமைவது அரிது: சரண்யா பொன்வண்ணன்குணசித்ர நடிகைகளுக்கு நல்ல படம் ... ஆர்ஆர்ஆர் - மீண்டும் ஆரம்பித்ததற்கு ஒரு வீடியோ ஆர்ஆர்ஆர் - மீண்டும் ஆரம்பித்ததற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in