Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரீகாந்துடன் இணையும் வித்யா பிரதீப்

06 அக், 2020 - 11:45 IST
எழுத்தின் அளவு:
Vidya-Pradeep-joins-Srikanth

'சைவம்' படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு 'தடம்' உள்பட பல படங்களில் நடித்தவர் வித்யாபிரதீப். சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் சீரியல் பக்கம் போனவர் மீண்டும்சினிமாவுக்கு திரும்பி பிசியாக நடிக்க தொடங்கி இருக்கிறார். 'பவுடர்' என்ற படத்தில் பேயாக நடிக்கும் அவர் அடுத்து ஸ்ரீகாந்துடன் இணைந்து 'எக்கோ' என்ற படத்தில் நடிக்கிறார்.


இதில் திஷா பாண்டே, காளி வெங்கட், ஆஷிஷ் வித்யார்த்தி உள்பட பலர் நடிக்கிறார்கள். சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர்.ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார்.


ஜான் பீட்டர் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை ஏக்நாத் எழுதுகிறார். 'கில்லி', 'தூள்', 'தடம்' உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பூஜையுடன் தொடங்கியது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் ராக்கர்ஸில் வந்தது பாலாவின் 'வர்மா'தமிழ் ராக்கர்ஸில் வந்தது பாலாவின் ... குணசித்ர நடிகைகளுக்கு நல்ல படம்  அமைவது அரிது: சரண்யா பொன்வண்ணன் குணசித்ர நடிகைகளுக்கு நல்ல படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in