மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
மும்பை : ஹிந்தி நடிகர் சுஷாந்த சிங் ராஜ்புட் மரணம் தொடர்பான சர்ச்சைகள் ஓயவில்லை. அவருக்கு நீதி வேண்டி தினமும் அவரது பெயரில் ஏதாவது ஒரு ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகி வருகிது. அவர் தற்கொலை தான் செய்தார் என கூறிய ஏய்ம்ஸ் டாக்டரே, ஒரு பேட்டியில் இது தற்கொலை மாதிரி தெரியவில்லை என கூறியிருக்கிறார். இதனால் இன்று(அக்., 5) இந்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
பாலிவுட்டில் வேகமாக வளர்ந்து வந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங், கடந்த ஜூன் 14ல் மும்பையில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. அவரை தற்கொலைக்கு துாண்டியதாக காதலி ரியா சக்கரவர்த்தி மீது சுஷாந்த் சிங் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். இதுதொடர்பான வழக்கை சிபிஐ., விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணை பாலிவுட்டின் வாரிசு அரசியலில் ஆரம்பித்து இப்போது போதை வரை மாறி பயணிக்கிறது. அதேசமயம் சுஷாந்த் தற்கொலை செய்யப்படவில்லை, அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற கருத்தும் பரவலாக பேசப்பட்டது. அதற்கு ஆதாரமாக அவரது உடம்பில் இருந்த காயங்களை சுட்டிக் காட்டினர். இதனால் அந்தக் கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
சுஷாந்த் தரப்பு வக்கீல் விகாஸ் சிங், சுஷாந்த் சிங் கழுத்து இறுக்கி கொல்லப்பட்டதற்கான அடையாளத்தை பார்த்ததாக, எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாக கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் எய்ம்ஸ் டாக்டர்கள் குழு, சுஷாந்த் சிங் உடலை பிரேத பரிசோதனை செய்தது குறித்த அறிக்கையை சி.பி.ஐ.,யிடம் வழங்கியது. இது குறித்து டாக்டர் சுதிர் குப்தா, தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், சுஷாந்த் சிங் மரணத்தில் மர்மம் எதுவுமில்லை. அவர் கொலை செய்யப்படவில்லை. தற்கொலை தான் செய்து கொண்டார். பிரேத பரிசோதனை ஆய்வில் இது தெரிய வந்துள்ளது என்றார்.
இது சுஷாந்த் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் தனியார் டிவி ஒன்று, இவ்விகாரம் தொடர்பாக டாக்டர் சுதிர் குப்தா அளித்த ஆடியோ பேட்டியை வெளியிட்டது. அதில் டாக்டர் சுதிர், சுஷாந்த் மரணம் தற்கொலை மாதிரி தெரியவில்லை. குற்றம் நடந்ததற்கான சாத்தியங்கள் இருப்பதாகவே தெரிகிறது. வழக்கமான போலீஸ் விசாரணையை மும்பை போலீஸ் மேற்கொள்ளவில்லை. குற்றம் நடந்த இடத்தில் தடையங்களை அழிக்கப்பட்டுள்ளன. மேலும் சுஷாந்த் இறந்துவிட்டார் என போலீஸ் எப்படி முடிவு செய்தது. மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக ஏன் சவகிடங்கிற்கு எடுத்து சென்றனர். சுஷாந்த் எப்போது இறந்தார் என்பதற்கான நேரமும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் மரணம் கொலையல்ல, தற்கொலை என கூறிய டாக்டர் இப்போது மாற்றி பேசியிருக்கிறார். இதனால் சுஷாந்த் மரண விஷயத்தில் ஏதோ மர்மங்களும், பல்வேறு குளறுபடிகளும் நடந்திருப்பது தெளிவாக புரிவதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
டாக்டரின் ஆடியோ விவகாரத்தை சுட்டிக் காட்டி, சுஷாந்த் ஆதரவாளர்கள் அவருக்கு நீதி வேண்டும் என சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக டாக்டர் சுதிர் குப்தா, பணத்திற்கு விலை போய் இப்படி ஒரு செயலை செய்திருக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக ஒரு மருத்துவ குழுவை வைத்து சுஷாந்த் மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கையை வெளியிட வேண்டும். சிபிஐ., இந்த விவகாரத்தில் டாக்டர் சுதிரையும் விசாரிக்க வேண்டும் என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதனால் டுவிட்டரில் #SushantConspiracyExposed, #SushantAIIMSTape, #SudhirGuptaSoldOut, #SudhirGupta, #AIIMS, #DrGupta போன்ற ஹேஷ்டாக்குகள் இந்திய அளவில் டிரெண்ட் ஆகின. சுஷாந்த் சிங் மறைந்தது கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் அவர் தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.