Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மூக்குத்தி அம்மன் - ஓடிடி ரிலீஸ்?

05 அக், 2020 - 11:27 IST
எழுத்தின் அளவு:
Mookuthi-amman-releasing-in-OTT

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் 'மூக்குத்தி அம்மன்'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராக இருந்தது. ஆனால், கொரானோ ஊரடங்கு காரணமாக படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.

இடையில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றார்கள். ஆனால், பின்னர் அதற்கு மறுப்பு தெரிவித்து படம் தியேட்டரில்தான் வரும் என்று தெரிவித்தார்கள்.

இந்நிலையில் மும்பையில் இருந்து ஐபிஎல் போட்டிகளுக்கு வர்ணனை செய்து வரும் இப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி, 20 நாட்கள் வர்ணனை செய்ய மாட்டேன் என்று நேற்று தெரிவித்தார். அப்போது 'மூக்குத்தி அம்மன்' புரமோஷனுக்காகச் சென்னை செல்கிறேன் என்றார்.

தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படாத நிலையில் பட புரமோஷன் என்று அவர் சொன்னது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. படத்தை ஓடிடி தளத்திற்கு விற்றுவிட்டார்களாம். தீபாவளியை முன்னிட்டு படம் வெளியாக உள்ளதாம். அதற்கான புரமோஷன் வேலைகளுக்காகத்தான் பாலாஜி சென்னை வருகிறார். இதன் மூலம் படத்தின் ஓடிடி ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுவிட்டது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தேசிய விருது வாங்குவாரா!தேசிய விருது வாங்குவாரா! சனம் ஷெட்டியை காதலித்து ஏமாற்றினார் : தர்ஷன் மீது வழக்கு பதிவு சனம் ஷெட்டியை காதலித்து ஏமாற்றினார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in