மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
இந்தியத் திரையுலகத்திலேயே சினிமா ஹீரோக்களை நிஜ ஹீரோக்கள் போல பாவிக்கும் குணம் கொண்டவர்கள் தெலுங்கு ரசிகர்கள்தான். அங்கு முன்னணியில் மட்டுமே 20 ஹீரோக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். சினிமாவை நேசிப்பதில் தெலுங்கு ரசிகர்களுக்கு ஈடு இணை யாரும் இல்லை என்றே சொல்லலாம்.
தெலுங்குத் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். அவருடைய படங்கள் சமீப காலத்தில் பெரிய வெற்றியைப் பெற்று வருகின்றன. தென்னிந்தியா முழுவதும் மட்டுமல்ல வட இந்தியாவிலும் அவருக்கு ரசிகர்கள் அதிகம்.
அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகர் ஒருவர் 200 கிமீ நடந்து வந்து அவரை சந்தித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாசெர்லா என்ற இடத்திலிருந்து அந்த ரசிகர் ஐதராபாத் வரை நடந்தே வந்திருக்கிறார்.
“கங்கோத்ரி' படத்திலிருந்தே நான் அல்லு அர்ஜுனின் ரசிகன். நான்கைந்து முறை அவரைச் சந்திக்க முயற்சித்தேன், ஆனால் நடக்கவில்லை. அதனால்தான் இப்படி ஒரு பாத யாத்திரை நடத்தினால் அவர் கவனத்தை ஈர்க்க முடியும் என நினைத்தேன். செப்டம்பர் 14ம் தேதியன்று நடக்க ஆரம்பித்து ஐதராபாத்திற்கு 22ம் தேதி வந்தேன்,” என்று நாகேஸ்வர் ராவ் என்ற ரசிகரின் வீடியோ வைரலானது.
அந்த சமயத்தில் அல்லு அர்ஜுன் ஊரில்லை. திரும்பி வந்த பின் நேற்று அந்த ரசிகரை நேரில் வரவழைத்து சந்தித்து நீண்ட நேரம் உரையாற்றியுள்ளார். தன்னுடைய முயற்சி வெற்றி பெற்றது குறித்து அந்த ரசிகர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.