நயன்தாராவின் ‛கோல்ட்' அப்டேட் | விடுதலை : வெற்றிமாறனின் திட்டம் | சூர்யாவின் இரும்புக்கை மாயாவி கைவிடப்பட்டது ஏன்? - லோகேஷ் பதில் | சக நடிகர்களை தவிர்க்கிறாரா கமல்ஹாசன், 'விக்ரம்' சர்ச்சை | நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி | 'லத்தி' இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால் | பாலாவுடன் சண்டையா? - வதந்திகளுக்கு சூர்யா பதிலடி | 'இந்தியன் 2' நடக்கும் : கமல்ஹாசன் தகவல் | தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' - ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் | கவனம் ஈர்த்த 'வீட்ல விசேஷம்' பட டிரைலர் |
பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் திடீர் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். 7 ஆண்டுகளுக்கு முன்பு வாய்ப்பு கேட்டு சென்றபோது தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இந்த குற்றச்சாட்டை அனுராக் மறுத்தார். அனுராக்கின் முன்னாள் மனைவிகளும் அவர் அப்படிப்பட்டவர் அல்ல என்றனர்.
இது தொடர்பாக பாயல் கோஷ் மும்பை வெர்சோவா போலீசில் புகார் அளித்தார். மகாராஷ்டிரா கவர்னரையும் சந்தித்தார். பாயல் கோஷ் அளித்த புகாரின் பேரில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி வெர்சோவா போலீஸ் அனுராக்கிற்கு சம்மன் அனுப்பியது.
அதன்படி நேற்று அனுராக் காஷ்யப் வெர்சோவா போலீஸ் முன் ஆஜரானார். அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தன் குற்றச்சாட்டை மறுத்த அவர் பாயல் கோஷ் குறிப்பிடும் தேதியில் நான் இந்தியாவில் இல்லை. படப்பிடிப்பு லொக்கேஷன் பார்ப்பதற்காக இலங்கை சென்றிருந்தேன் என்று கூறி அதற்கான ஆவணங்களை ஒப்படைத்தார். இது பாயல் கோஷின் புகாரில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.