ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
மாதவன், அனுஷ்கா நடித்துள்ள படம் சைலன்ஸ் (நிசப்தம்). தெலுங்கு, தமிழ், மலையாள மொழிகளில் உருவாகி இருக்கிறது. அஞ்சலி, ஷாலினி பாண்டே, மைக்கேல் மேட்சன், ஒலிவியா டங்க்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுகர் இயக்கியுள்ள இந்தப் படத்தை கோனா வெங்கட், விஷ்வ பிரசாத் தயாரித்துள்ளனர். கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார்.
முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாரான படம். பல முறை தியேட்டரில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் தள்ளி வைக்கப்பட்டு, பிறகு கொரோனாவில் சிக்கி தற்போது ஒரு வழியாக அமேசான் ப்ரைம் டைமில் நேற்று நள்ளிரவு வெளியானது.
வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே பைரசி இணைய தளத்திலும் வெளியாகி உள்ளது. சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் பல செய்தும் படம் லீக் ஆனதில் தயாரிப்பாளரும், ஓடிடி நிறுவனத்தினரும் அப்பெட்டில் உள்ளனர்.