மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
கொரானோ ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் ஆறு மாதங்களுக்கு மேலாக திறக்கப்படாத காரணத்தால் ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் நேரடியாக வெளியாகின. ஓடிடி தளங்களில் ஒரு வருடத்திற்கான கட்டணத் தொகையைக் கட்டினாலே இப்படி வெளியாகும் புதிய படங்களைப் பார்க்கலாம்.
இந்நிலையில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'க.பெ.ரணசிங்கம்' படத்தை 199 ரூபாய் கட்டணம் செலுத்தினால் மட்டுமே பார்க்க முடியும் என்ற புதிய திட்டத்தில் இன்று வெளியிட்டுள்ளார்கள். அதன்படி படத்தைப் பார்க்க கட்டணத்தை செலுத்தினால் 48 மணி நேரத்திற்குள்ளாக அந்தப் படத்தைப் பார்த்துவிட வேண்டும்.
மேலும், கட்டணம் செலுத்தி படத்தைப் பார்க்க ஆரம்பித்துவிட்டால், அடுத்த 6 மணி நேரங்களில் மட்டுமே படத்தைப் பார்க்க முடியும். அதன்பிறகு படத்தைப் பார்க்க முடியாது. ஆறு மணி நேரத்திற்குள் படத்தைப் பார்க்க முடியாமல் போய்விட்டால் மீண்டும் ஒரு முறை 199 ரூபாய் செலுத்தியாக வேண்டும் என அறிவித்துள்ளார்கள்.
வீட்டில் கரெண்ட் கட் ஆனாலோ, இணையதளம் கட் ஆனாலோ ஆறு மணி நேரத்தில் படத்தைப் பார்த்து முடிக்க முடியாமல் போனால் அவர்கள் அதற்கு பொறுப்பில்லையாம். இந்த சிக்கலான முறையில்தான் இந்தப் படத்தைப் பார்க்க முடியும்.