மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
கொரோனா தாக்கம் முற்றிலும் ஒழியாவிட்டாலும் கூட, சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டதால் பல படங்களில் படப்பிடிப்புகள் துவங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 'திரிஷ்யம்-2' என்கிற பெயரிலேயே சமீபத்தில் துவங்கியுள்ளது. மோகன்லால், மீனா என முதல் பாகத்தில் நடித்த பலரும் இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறார்கள்.
இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து கேரளா சென்ற மீனா, பாதுகாப்பு நடவடிக்கையாக படக்குழுவினருடன் சேர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு. அதன்பின் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் போல பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இந்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார் மீனா.
கேரளாவுக்கு சென்று இறங்கிய மீனா, கொரோனா தாக்கம் ஆரம்பித்த பிறகு ஆறு மாதங்களுக்கு பின்னர் பயணிக்கும் தனது முதல் பயணம் மிகவும் வித்தியாசமாக இருந்ததாகவும் கேரளா விமான நிலையமே ஆள் அரவம் இல்லாமல் பாலைவனம் போல வெறிச்சோடி காணப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் விமான நிலையத்தில் இதுபோன்ற பாதுகாப்பு கவச உடையுடன் தான் இறங்கியது விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் போல பாதுகாப்பு உடை அணிந்திருந்தாலும், ஏதோ போருக்கு செல்வது போன்ற உணர்வு தான் இருந்தது என்றும் கூறியுள்ளார். அதேசமயம் விமான நிலையத்தில் பலரும் தன்னை போன்று உடை அணியாமல் வெகு சாதாரணமாக உலா வந்ததையும் பார்க்க முடிந்தது என்றும் தனது பயண அனுபவம் பற்றி கூறியுள்ளார் மீனா.