Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புளுகு மூட்டை விஜய் டிவி : கஸ்தூரி பதிலடி

01 அக், 2020 - 13:07 IST
எழுத்தின் அளவு:
Biggboss-salary-issue-:-Kasthuri-replied-to-Vijay-TV

கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி பங்கேற்றார். ஓராண்டாகியும் இந்த நிகழ்ச்சிக்கு தனக்கான சம்பளம் வரவில்லை. ஆதரவற்ற குழந்தைகளின் ஆபரேஷனுக்காக அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன், ஆனால் தன்னை ஏமாற்றிவிட்டனர் என்பது போன்று குற்றம் சாட்டியிருந்தார் கஸ்தூரி.

ஆனால் இதை விஜய் டிவி நிர்வாகம் மறுத்துள்ளது. அவர்கள் கூறுகையில், நாங்கள் எப்போதும் பொறுப்பான சேனலாகவும், ஒப்பந்த விதிமுறைகளின்படி அனைவருக்கும் சரியான நேரத்தில் பணம் செலுத்தியும் வந்துள்ளோம். கஸ்துாரிக்கான தொழில்முறை கட்டணத்தை நாங்கள் செலுத்தி விட்டோம். அவரது ஜி.எஸ்.டி.,க்கான ஆவணங்களை இன்னும் சமர்பிக்காததால், அந்த ஜி.எஸ்.டி., கட்டணம் மட்டுமே நிலுவையில் உள்ளது. மேலும் எங்கள் சேனலின் மற்றொரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதற்கான சம்பளத்தொகை பில்லை அவர் இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்பதால் எங்களால் அந்த கட்டணம் செலுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

விஜய் டிவியின் விளக்கத்திற்கும் கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார். அதில், பொய்யை நிஜமென்று ஊரை நம்பவைப்பது பிக்பாஸ் புகழ் விஜய் டிவிக்கு புதிதா என்ன? இப்பொழுது எனது சம்பள பாக்கிக்கான காரணம் என்ன என்று விஜய் டிவி தரப்பில் ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இதுவும் அவர்கள் தயாரிக்கும் நிகழ்ச்சிகள் போலவே தான். உண்மை போலிருக்கும், ஆனால் முழுக்க பொய்தான்.

நானும் நம்பினேன், ஒரு வருடம் பொறுமை காத்தேன். விஜய் டிவி ஒரு பெரிய தொலைக்காட்சி, உலகப்புகழ் டிஸ்னி ஸ்டார் கார்பொரேட் நிறுவனம் என்று மதித்து காத்திருந்தேன் . கடைசியில் வெறுத்து போய் வேறு வழியே இல்லாமல் தான் சம்பள பாக்கி விஷயத்தை வெளிப்படையாக அறிவித்தேன்.

அவர்கள் கூறியிருக்கும் அபத்தங்களில் ஒன்று, சம்பள பாக்கி இல்லை, வரியை மட்டும் பிடித்து வைத்துள்ளார்கள் என்பது. GST வரியை அவர்கள் இஷ்டத்திற்கு கொடுக்காமல் பிடித்து வைக்கவெல்லாம் முடியாது. ஏனென்றால் GST வரி கட்டுவது அவர்கள் அல்ல, நான். அதையும், விஜய் டிவி எனக்கு எழுதி கொடுத்த கணக்கின் படி , அவர்களின் சொல்படி நான் கட்டியுள்ளேன். எனது சம்பள படிவத்தை நிரப்பி கொடுத்ததே விஜய் டிவி பொருளாளர் தான். மேலும், வரியை பிடித்து வைப்பதானால் அரசுக்கும் எனக்கும் முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும். அதெல்லாம் எதுவும் செய்யவில்லை. பாக்கி வைத்துவிட்டு இப்பொழுது புளுகுகிறார்கள்.

என்னவோ வேறு ஒரு நிகழ்ச்சி, அதற்கு நான் இன்வாய்ஸ் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்களே, அது எந்த நிகழ்ச்சி? கடந்த ஒரு வருடத்தில் அவர்கள் எந்தெந்த பிக்பாஸ் போட்டியாளரை வைத்து நிகழ்ச்சிகள் செய்து வருகிறார்கள் என்று தான் ஊருக்கே தெரியுமே. என்னை வைத்து எந்த வேறொரு நிகழ்ச்சியை செய்தார்களாம், அதற்கு நான் இன்வாய்ஸ் அனுப்பவில்லையாம்?

நான் சம்பளம் கேட்டு அனுப்பிய நோட்டீசுகளுக்கும் சம்பளம் வராத நிலையில் நான் அரசுக்கு கட்டிய GST வரிக்கும் என்னிடம் கட்டுக்கட்டாக ஆதாரம் உள்ளன. விஜய் டிவியின் சில்லறை புத்தி இனி செல்லுபடியாகாது என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
சோனுசூட்டிடம் உதவி பெற்றுத் தருவதாக பணமோசடி: போலீசில் புகார்சோனுசூட்டிடம் உதவி பெற்றுத் தருவதாக ... போருக்கு போவது போல் உணர்ந்தேன்: மீனாவின் முதல் பயணம் போருக்கு போவது போல் உணர்ந்தேன்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

Bhaskaran - Chennai,இந்தியா
04 அக், 2020 - 07:58 Report Abuse
Bhaskaran காசுக்காக கொள்கையை மாற்றி கொள்ளும் மின்னூடகங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
04 அக், 2020 - 07:57 Report Abuse
Bhaskaran என்ன சொன்னாலும் உரைக்காது
Rate this:
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
04 அக், 2020 - 05:23 Report Abuse
Rangiem N Annamalai நிமிடத்திர்ற்கு நிமிடம் சம்பாரிப்பவர்கள் பணம் கொடுக்கவில்லை என்றால் தவறு .அவர்களுக்கு மக்கள் மார்க் போடுவார்கள் என்பதை மறந்து விட்டார்கள் .
Rate this:
ponssasi - chennai,இந்தியா
02 அக், 2020 - 13:53 Report Abuse
ponssasi எம் ஜி ஆர் என்று ஒரு மாமனிதர் இருந்தார். அவர் நடிக்கும் படங்களில் அவருக்கு என்ன உணவு பரிமாறப்படுகிறதோ அதே உணவு அனைவர்க்கும் சமமாக இருக்கவேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு போடுவாராம். படம் முடியும் தருவாயில் அனைவர்க்கும் சம்பளம் சேர்ந்துவிட்டதா என கேட்டு கடைசி காட்சியை முடித்து கொடுப்பாராம். அவரை போல சிலர் கனவுகண்டு முதல்வராகலாம் என்று துடிக்கின்றனர். ஆனால் அவருடன் வாழ்த்த கௌதமி இங்கே தன மகளுக்கு பாதுகாப்பில்லை என்று கமல் வீட்டை விட்டு வெளியேறினார். கமல் கௌதமிகு கொடுக்கவேண்டிய சம்பளத்தை கொடுக்கவில்லை. அவர் நடத்தும் நிகழ்ச்சி மட்டும் எப்படி இருக்கும்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
02 அக், 2020 - 15:44Report Abuse
 Muruga Velசந்திரபாபு MGR அவர்களை வைத்து மாடி வீட்டு ஏழை படம் எடுத்த கதையை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்...
Rate this:
Truth Triumph - Coimbatore,இந்தியா
02 அக், 2020 - 20:37Report Abuse
Truth Triumphசந்திர பாபு செய்த கொடுமை கண்ணதாசன் அவர்கள் கவலை இல்லாத மனிதன் படத்தின் மூலம் அனைவரும் அறிந்ததே. இதை யாரும் மறுக்க முடியாது. முற்பகல் செய்யின்...... கர்த்தர், ஜோசப் சந்திரா பாபுவை மன்னிக்க வில்லை......
Rate this:
Truth Triumph - Coimbatore,இந்தியா
01 அக், 2020 - 20:42 Report Abuse
Truth Triumph நல்ல முயற்சி நன்றி
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in