175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனுசூட் கொரோனா கால பணிகளில் நிஜ ஹீரோவாக பார்க்கப்படுகிறார். ஐ.நா. சபை அவருக்கு அமைதிக்கான விருது கொடுத்து கவுரவித்துள்ளது. கொரோனா ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில் தற்போது அவர் ஹெல்ப் என்ற ஆப்பை உருவாக்கி அதன் மூலம் உதவிகள் செய்து வருகிறார். தற்போது கொரோனா பாதிப்பால் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உதவி வருகிறார்.
இந்த நிலையில் சில மோசடி கும்பல்கள் சோனுசூட்டிடம் உதவி பெற்றுத் தருகிறோம் சேவை கட்டணமாக 1700 ரூபாய் கட்டுங்கள் என்று மோசடி செய்து வந்துள்ளது. இதை கண்டுபிடித்த சோனுசூட் அந்த கும்பலின் ஐடியை டேக் செய்து இந்த கும்பலிடம் ஏமாந்து விடாதீர்கள். அப்பாவி மக்களை ஏமாற்றும் இவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
தற்போது சோனுசூட் சார்பில் அவரது நண்பரும், நடிகருமான விஷால் லம்பா மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் இந்த கும்பல் குறித்து புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.