Advertisement

சிறப்புச்செய்திகள்

பதிரனாவுடன் காதலா? விளக்கமளித்த பாக்கியலெட்சுமி நடிகை | யாஷிகாவுடன் காதலா? - வெறும் புரொமோஷன் தாங்க என்கிறார் ரிச்சர்ட் ரிஷி | பொய் புகார் : பிரான்ஸ் பெண் மீது அறம் இயக்குனர் புகார் | போதையில் நடிகர் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு | காதலியை கரம்பிடிக்கும் நரேஷ் | நீண்ட இடைவேளைக்குப் பின் சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் சாதனா | சுரேஷ்கோபி படம் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய அனுபமா பரமேஸ்வரன் | நேஹா சக்சேனாவும் பரபரப்பு வளையத்தில் சிக்குவாரா? | இறுதிக்கட்டத்தை எட்டிய அர்ஜுன் - நிக்கி கல்ராணியின் மலையாள படம் | 35 வருடங்களுக்குப் பிறகு வைரலான மோகன்லால் - மம்முட்டி தம்பதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்த ஆண்டுக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்: கோர்ட் உத்தரவு

01 அக், 2020 - 10:39 IST
எழுத்தின் அளவு:
Producers-Association--election:-Court-order

விஷால் தலைமையில் பணியாற்றி வந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடைந்ததாலும், தயாரிப்பாளர்களிடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாகவும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளரான என்.சேகர் என்பவரைத் தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. தனி அதிகாரியின் நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சங்க தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க கோரியும் விஷால் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தனி அதிகாரியின் நியமனத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. ஆனால், தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரனை சிறப்பு அதிகாரியாக நியமித்து, ஜூன் 30ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.


கொரோனா ஊரடங்கைக் கருத்தில் கொண்டு தேர்தலை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் மறு உத்தரவு பிறப்பித்தது. தற்போது கொரோனா பிரச்சினை முடிவுக்கு வராத காரணத்தால் தேர்தல் நடத்த மேலும் கால அவகாசம் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். தேர்தலை நடத்தி முடித்தது குறித்த அறிக்கையை 2021 ஜனவரி 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சக்ராவை ஓ.டி.டி.,யில் வெளியிட தடை விதிக்க கோர்ட் மறுப்புசக்ராவை ஓ.டி.டி.,யில் வெளியிட தடை ... சோனுசூட்டிடம் உதவி பெற்றுத் தருவதாக பணமோசடி: போலீசில் புகார் சோனுசூட்டிடம் உதவி பெற்றுத் தருவதாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in