ரஜினிக்கு பதிலாக சிம்பு | சாமி சாமி பாடலுக்கு இனி ஆடப்போவதில்லை ; ராஷ்மிகா | பவன் கல்யாண் படத்தில் நான் நடிக்கவில்லை ; மாளவிகா மோகனன் | தலைவி பட வெளியீட்டில் நஷ்டம் : நீதிமன்றத்தை நாட விநியோகஸ்தர் முடிவு | தனுஷூடன் கைகோர்க்கும் கட்டா குஸ்தி இயக்குனர் | மே-11ல் வெளியாகும் ஜோதிகாவின் மலையாள படம் | குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்த ஆஸ்கர் விருது பட தம்பதி | நிழலும் நிஜமும் : சத்யப்ரியாவின் குடும்பத்தை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள் | வளருங்கள் இது வெறும் ஷோ தான் : செந்தில் கவுண்டமணியை வைத்து ஹேட்டர்ஸை கலாய்த்த வெங்கடேஷ் பட்! | 44 வயதில் திருமணம்? - வைரலாகும் அருவி சீரியல் நடிகையின் புகைப்படங்கள் |
விஷால், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினி கெசண்ட்ரா நடித்துள்ள படம் சக்ரா. ஆனந்தன் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். படம் தீபாவளி அன்று ஓ.டி.டி., இணையதளத்தில் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்துக்கு தடை கேட்டு டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது : நடிகர் விஷால், தமன்னா ஆகியோர் நடித்த ஆக்ஷன் திரைப்படத்தை தயாரித்தேன். இந்த படத்தை தியேட்டரில் வெளியிடுவது தொடர்பாக நானும், விஷாலும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அவர் சுமார் 8.5 கோடி எனக்கு தர வேண்டும். ஆனால், அவர் பணத்தை தரவில்லை.
ஆனந்தன் என்ற இயக்குனர் என்னிடம் ஒரு கதை சொன்னார். அதை படமாக்க எடுக்க ஒப்பந்தம் செய்தேன். ஆனால், வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் அந்த கதை 'சக்ரா' என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். எனவே இந்த திரைப்படத்தை ஓ.டி.டி.,யில் வெளியிட தடை விதிக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிமன்றம் சக்ரா படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட இடைக்கால உத்தரவு பிறப்பித்ததோடு இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து இருந்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விஷால் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்காக விஷால் நடித்த 'ஆக்ஷன்' திரைப்படம் லாபம் ஈட்டியுள்ளது. 'சக்ரா' திரைப்படம் தொடர்பாக ரவீந்திரனுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த வழக்கை வருகிற 5ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிமன்றம், படத்தை ஓ.டி.டி., தளத்தில் வெளியிடுவதற்கு விதித்திருந்த இடைக்கால தடையை நீட்டிக்க மறுத்து விட்டது. இதனால் தற்போது சக்ரா படம் ஓ.டி.டி., தளத்தில் வெளிவருவதில் எந்த பிரச்சினையும் இல்லை.