பகவந்த் கேசரி பராக்: பாலய்யாவின் அடுத்த அதிரடி | விஜய் சேதுபதி படப்பிடிப்பை பார்க்க திரளும் மலேசிய மக்கள்: படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் | ஜூனியர் என்டிஆர் படத்தில் பிரியங்கா சோப்ரா? | பதிரனாவுடன் காதலா? விளக்கமளித்த பாக்கியலெட்சுமி நடிகை | யாஷிகாவுடன் காதலா? - வெறும் புரொமோஷன் தாங்க என்கிறார் ரிச்சர்ட் ரிஷி | பொய் புகார் : பிரான்ஸ் பெண் மீது அறம் இயக்குனர் புகார் | போதையில் நடிகர் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு | காதலியை கரம்பிடிக்கும் நரேஷ் | நீண்ட இடைவேளைக்குப் பின் சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் சாதனா | சுரேஷ்கோபி படம் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய அனுபமா பரமேஸ்வரன் |
சிம்பு நடித்த மன்மதன், விக்ரம் நடித்த கிங், தனுஷ் நடித்த திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், துஷ்யந்த் நடித்த மச்சி படங்களை தயாரித்தவர் எஸ்.கே.கிருஷ்ணகாந்த். கடைசியாக விவேக் முதன் முறையாக ஹீரோவாக நடித்த சொல்லி அடிப்பேன் என்ற படத்தை தயாரித்தார் அந்த படம் வெளிவரவில்லை. அவர் தயாரித்த படங்களில் ஒரு சில தவிர மற்றவைகள் தோல்வி அடைந்தது.
இதனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான அவர் தயாரிப்பில் இருந்து விலகினார். அதன் பிறகு பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் மானேஜராக பணியாற்றினார்.
சாலிகிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்த வந்த அவருக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக அறிவித்தனர். இன்று அவரது இறுதி சடங்குகள் நடக்கிறது. 52 வயதான கிருஷ்ணகாந்துக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
சிம்பு இரங்கல்
நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம். "மன்மதன்" படம் என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்களைக் கொண்டது. என் மீது மிகுந்த அன்பு கொண்டவர் கிருஷ்ணகாந்த். "மன்மதன்" படத்தை என் மீது நம்பிக்கை வைத்து இயக்கச் சொன்னவர். நீங்க ஸ்கிரிப்ட் பண்ணுங்க, இயக்குங்க என உற்சாகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்ட நல்ல மனிதர். அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கலங்க வைக்கிறது. அவரது இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் மடியில் அந்த நல்ல ஆத்மா அமைதி கொள்ளட்டும்.