Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

5 இயக்குனர்களின் படைப்பில் 'புத்தம் புது காலை' - ஓடிடியில் அக்., 16ல் ரிலீஸ்

30 செப், 2020 - 17:41 IST
எழுத்தின் அளவு:
5-top-directors-story-in-one-movie-titled-as-Putham-Pudhu-Kaalai

தமிழ் சினிமாவில் பிரபலமான 5 இயக்குனர்களான -சுதா கொங்கரா, கவுதம் மேனன், சுஹாசினி மணிரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரது இயக்கத்தில் 5 குறும்படங்களாக உருவாகி, அதை ஒரே படமாக ஆந்தாலஜி திரைப்படமாக மாற்றி உள்ளனர். இப்படத்திற்கு 'புத்தம் புது காலை' என பெயரிட்டுள்ளனர். இதை அக்டோபர் 16 ஆம் தேதி, 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அமேசான் பிரைம் தளத்தில் வெளியிடுகின்றனர். 5 குறும்படங்கள் விபரம்...

இளமை இதோ இதோ கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். காளிதாஸ் ஜெயரம், கல்யாணி பிரியதர்ஷன் ஊர்வசி, ஆகியோர் நடித்துள்ளனர்.

அவரும் நானும்/ அவளும் நானும் கதையை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி உள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ரீத்து வர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.

காபி, எனி ஒன்? கதையை சுஹாசினி மணிரத்னம் இயக்கி, நடிக்க அவருடன் அனுஹாசன், ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளனர்.

ரீயூனியன் கதையை ராஜீவ் மேனன் இயக்க, ஆண்டிரியா, லீலா சாம்சன், மற்றும் சிக்கில் குருச்சரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

மிராக்கிள் கதையை கார்த்திக் சுப்புராஜ் இயக்க, பாபி சிம்ஹா, முத்துக்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.

புத்தம் புது காலை திரைப்படம் 'ஊரடங்கு தளர்வின்' போது படப்பிடிப்பிற்காக தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் வகுத்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றி படமாக்கப்பட்டது.

"நம்பிக்கை, காதல் மற்றும் புதிய தொடக்கங்களை பற்றி பேசவும் மற்றும் இந்த சவாலான காலக்கட்டத்தில் கலை மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்து கொள்ளும் நோக்கத்துடனும் புத்தம் புது காலை உருவானது, மேலும் புத்தம் புது காலை மூலம் தமிழ் பொழுதுபோக்கு துறையின் மிகச் சிறந்த படைப்பாளிகளின் படைப்புக்களை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம்." என்று அமேசான் பிரைம் வீடியோவின் இந்திய ஒரிஜினல்ஸின் தலைவர் அபர்ணா புரோஹித் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கல்விக்கு வயதில்லை: 53 வயதில் கல்லுாரி செல்லும் நடிகைகல்விக்கு வயதில்லை: 53 வயதில் ... அக்., 15 முதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அக்., 15 முதல் தியேட்டர்கள் திறக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in