Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கல்விக்கு வயதில்லை: 53 வயதில் கல்லுாரி செல்லும் நடிகை

30 செப், 2020 - 16:54 IST
எழுத்தின் அளவு:
Actress-Hema-going-to-college-at-the-age-of-53

தமிழில் கேயார் இயக்கிய ஈரமான ரோஜாவே படத்தில் நாயகியின் அக்காவாக நடித்தவர் ஹேமா. அதன்பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்தவர் தெலுங்கு பக்கம் சென்று விட்டார். அங்கு அம்மா, அக்கா, அண்ணி வேடங்களில் 200 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். தற்போது அரசியலிலும் குதித்து விட்டார்.


இந்த நிலையில் 53 வயதாகும் ஹேமா ஐதராபாத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ., படிக்க விண்ணப்பித்துள்ளார். இதற்காக நலகொண்டா அரசு கல்லுாரியில் நடந்த நுழைவு தேர்வில் கலந்து கொண்டு தேர்வும் எழுதினார்.


'சின்ன வயதிலிருந்தே நிறைய படிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க முடியவில்லை. நடிக்க வந்த பிறகு படிக்க நேரம் இல்லை. இப்போது எனக்கு நிறைய நேரம் இருக்கிறது. அரசியலில் பணியாற்ற படிப்பு மிகவும் முக்கியம். அதனால் படிக்க வந்திருக்கிறேன்'. என்கிறார் ஹேமா.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
புற்றுநோயாளிகள் பாதுகாப்பு மையத்துக்கு  ஹரிஷ் கல்யாண் நிதி உதவிபுற்றுநோயாளிகள் பாதுகாப்பு ... 5 இயக்குனர்களின் படைப்பில் 'புத்தம் புது காலை' - ஓடிடியில் அக்., 16ல் ரிலீஸ் 5 இயக்குனர்களின் படைப்பில் 'புத்தம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Indhuindian - Chennai,இந்தியா
02 அக், 2020 - 06:06 Report Abuse
Indhuindian மெட்ராஸ் யூனிவர்சிட்டி சென்று பாருங்கள் எவ்வளவு முதியவர்கள் இளநிலை மற்றும் முது நிலை கல்வி கற்கிறர்கள் என்று திறந்த வெளி பல்கலை கழகம் இல்லை. தினமும் மற்ற மாணவர்களை போல் கல்லூரி சென்று வகுப்பில் சுமார் ஐந்து மணி நேரம் அமர்ந்து தேர்வு எழுதுகிறார்கள் என்று. பல வருடங்களுக்கு ஒரு முதியவர் சுமார் எழுபது வயது இருக்கும் அவர் வகுப்பறையில் இருந்து வெளியே வரும்போது வயது முதிர்வு காரணமாக மூர்ச்சையாகி காலமானார். இதெல்லாம் நியூஸிலே வராது ஏன்னா அரசியல் வாதி நடிகர்கள் இவங்கதான் முக்கியம்
Rate this:
Manian - Chennai,இந்தியா
01 அக், 2020 - 03:40 Report Abuse
Manian அமெரிக்காவில் 60ஐ கடந்து தற்போது கல்லூரிகளில் படிப்பவர்கள் 60 லட்சம் பேர்கள். அவர்களுக்காக புதிய வசதி உள்ள நவீன தங்கும் விடுதிகளும் கட்டப் படுகின்றன.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
02 அக், 2020 - 15:38Report Abuse
 Muruga Velஒவ்வொரு ஆண்டு கிராஜூவேஷன் நிகழ்ச்சியில் பல சீனியர் சிட்டிசன்களை இளைஞர்களோடு பட்டம் வாங்கும் வரிசையில் காணலாம் ..அதே போல மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் இளைஞர்களோடு டீமில் சீனியர் சிட்டிசன்களையும் பார்க்கலாம்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in