Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை!

30 செப், 2020 - 14:25 IST
எழுத்தின் அளவு:
No-intention-of-apologizing!-Divya

நடிகர் சத்யராஜுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் சிபிராஜ் நடிகராக உள்ளார். ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா கொரோனா நேரத்தில் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க மகிழ்மதி என்ற இயக்கத்தை ஆரம்பித்து செயல்படுத்தி வருகிறார்.




பெரும்பாலும் ஊடக வெளிச்சம் தன் மீது படுவதை திவ்யா விரும்புவதில்லை. ஆனாலும் அவ்வப்போது தனது மனதிற்கு தவறென தெரியும் சம்பவங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். அந்தவகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகளை பற்றியும், நீட் தேர்வுவை எதிர்த்தும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார் திவ்யா. அந்தக் கடிதம் இணையத்தில் வைரலானது.




இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரத யாத்திரைக்கு அனுமதிக்க கூடாது என கோரிக்கை விடுத்திருந்தார் திவ்யா. ஆனால் இந்த விவகாரத்தில் திவ்யாவுக்கு எதிராக சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது. திவ்யா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் சிலர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், ரத யாத்திரைக்கு அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கை தொடர்பாக மன்னிப்பு கேட்க முடியாது என திவ்யா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.




'கொரோனா நேரத்தில் தமிழகத்தில் ரத யாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பிருக்கிறது. கொரோனா நேரத்தில் ரத யாத்திரைக்கு அனுமதி அளிப்பது நியாயம் கிடையாது. தமிழ் மக்கள் உடல் நலத்தின் மீதும் உயிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும் தமிழ் மகளாகவும் ரத யாத்திரையை எதிர்க்கிறேன். மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை மக்களின் உயிர் மீதும் உடல் மீதும் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. ரத யாத்திரையை எதிர்ப்பதற்கு மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை” என திவ்யா கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இன்னும் சம்பளம் வரல - கஸ்தூரிபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இன்னும் ... புற்றுநோயாளிகள் பாதுகாப்பு மையத்துக்கு  ஹரிஷ் கல்யாண் நிதி உதவி புற்றுநோயாளிகள் பாதுகாப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Manian - Chennai,இந்தியா
01 அக், 2020 - 01:33 Report Abuse
Manian இந்தம்மா சொன்னது சரிதான். அதேபபோல எல்லா கூட்டங்களையும் தடுப்பது அவசியம் என்பதும் உண்மைதான். அதை அவர் சொல்லவில்லை என்பதால் அவரது கருதத்து தவராகாது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in