எனது திருமணம் ஒரு விசித்திர கதை: ஹன்சிகா | நான் குடிக்கவேமாட்டேன் : ஓட்டேரி சிவா கண்ணீர் பேட்டி | சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள் | தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி | 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? | கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா திருமணம், பிரபலங்கள் வாழ்த்து | விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது |
'லைம் லைட் பிக்சர்ஸ்' சார்பில், அஜி இடிகுலா தயாரிக்க, வரலட்சுமி சரத்குமார், ராம்குமார், இனியா, திவ்யா பிள்ளை, மொட்டை ராஜேந்திரன், மதுமிதா உள்ளிட்டோர் நடிக்கும் படம் கலர்ஸ். இப்படத்தை, மலையாளத்தில், 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய, நிஜார் இயக்கியுள்ளார்.
படம் குறித்து, நிஜார் கூறியதாவது:விதவிதமான மனித மனங்களை குறிக்கும் வகையில் தான், இப்படத்திற்கு, கலர்ஸ் என பெயரிட்டோம். குடும்பத்தோடு பார்க்க வேண்டிய, 'ஆக் ஷன் த்ரில்லர்' படம் இது.கதைக்காகவே, இதன் தயாரிப்பாளர், படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார். தற்காப்பு கலைஞராக நடித்துள்ள வரலட்சுமி, சண்டைக் காட்சிகளில் அசத்தியுள்ளார்.
கொரோனாவுக்கு முன்பே, இரண்டு கட்டமாக, 55 நாட்களில் படத்தை எடுத்து முடித்தோம்.ஊரடங்கு நேரத்தில், படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை திட்டமிட்டு முடித்தோம். விரைவில், தியேட்டர்கள் திறக்கப்படும் சூழல் உள்ளதால், இப்படத்தை கண்டிப்பாக, தியேட்டரில் மட்டுமே வெளியிடுவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.