பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் |
கொரோனா தாக்கம் காரணமாக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு விதிகள், தளர்வு செய்யப்பட்டு வருவதால், தற்போது சினிமா படப்பிடிப்புகள் முழுவேகத்தில் நடைபெற ஆரம்பித்துள்ளன.. இந்த நிலையில் நித்யாமேனன் தெலுங்கில் நடித்து வரும் 'நின்னிலா நின்னிலா வெண்ணிலா' என்கிற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அனி சசி என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடித்து வருகிறார்.
ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் நித்யா மேனன், அசோக் செல்வன் இருவரும் கடந்த ஒரு வாரமாக, ஒரே நேரத்தில் ஒரே தட்டில் சாப்பிட்டு வந்துள்ளனர். இந்த தகவலை புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நித்யாமேனன்.. படத்தில் இவர்கள் மாயா, தேவ் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களாம் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போலவே நிஜத்திலும் இப்படி ஒரே தட்டில் சாப்பிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் நித்யா மேனன்