ஆகஸ்ட் 12ல் லத்தி வெளியீடு | சிவாஜி குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றொரு நடிகர் | 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் மகாநதி ஷங்கர் | பத்து தல படத்திற்கு தயாரான சிம்பு | சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி நடிக்கும் புதிய வெப்சீரிஸ் | விஜயின் 67வது படம்: உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்! | வெளிநாட்டில் பட்டம் பெற்ற சரத்குமார் - ராதிகாவின் மகன் | சிறு பட்ஜெட் படங்களை வெளியிட உதயநிதிக்கு சீனு ராமசாமி கோரிக்கை! | நடிகையாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி! |
இயக்குநர் சசிகுமார் பிறந்த நாளை முன்னிட்டு திரையுலகப் பிரபலங்கள் பலரும் சசிகுமாருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
சசிகுமார் தயாரிப்பில் வெளியான பசங்க படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். தற்போது முன்னணி இயக்குநராக வலம்வரும் பாண்டிராஜ், சசிகுமாருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
"உங்கள் வாழ்க்கையை மாற்றிய நபரை, கனவுக்கு உயிர் கொடுத்தவரை, உங்கள் வலி மிகுந்த காலங்களில் உங்களுக்காக அக்கறை காட்டியவரை, என்ன சொல்லி அழைப்பீர்கள்? எஜமானர், நண்பர், அக்கறையுடன் கவனித்துக் கொள்பவர், நல விரும்பி என் வாழ்க்கையில் இந்த எல்லா விஷயங்களையும் சசிகுமார் செய்துள்ளார்". இவ்வாறு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.