Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன்

29 செப், 2020 - 15:21 IST
எழுத்தின் அளவு:
Avatar-2-completed,-3-completed-nearly-95-percent-says-James-Cameron

ஜேம்ஸ் மேரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளிவந்து உலகையை வியக்க வைத்த படம் ‛அவதார்'. இந்தியா உட்பட உலக நாடுகளில் 2.79 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்து சாதனை புரிந்தது. இதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாக உள்ளன. இதற்கான படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்தாண்டு இறுதியில் அவதார் 2 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பிரச்னை வந்ததால் படப்பிடிப்பு நின்று போனது. இதனால் இப்படத்தின் ரிலீஸ் தேதி அடுத்தாண்டுக்கு மாற்றி வைக்கப்பட்டது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நியூசிலாந்தில் ஆரம்பித்தது.

இந்நிலையில் அவதார் 2 படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது, அவதார் 3 படத்திற்கான படப்பிடிப்பும் கிட்டத்தட்ட 95 சதவீதம் முடிந்துவிட்டது என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

இதுப்பற்றி அவர் மேலும் கூறுகையில், எல்லோரையும் போல எங்களையும் கொரோனா கடுமையாகப் பாதித்தது. நான்கரை மாதங்களை இழந்தோம். இதனால் பட வெளியீடு ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுப்பற்றி ஏற்கனவே அறிவித்துள்ளோம். தொடர்ந்து நியூசிலாந்தில் படப்பிடிப்பில் இருக்கிறோம். அவதார் 2 முழுமையாக முடிந்துவிட்டது. அவதார் 3 படப்பிடிப்பு 95 சதவீதம் நிறைவுபெற்றது. மீதிக்காட்சிகள் படமாகி வருகின்றன என்றார்.

ஏற்கனவே அவதார் 2 படத்தின் உலகம் இப்படி தான் இருக்க போகிறது என கடந்த ஜனவரி மாதம் சில புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு இருந்தனர். அப்போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமான நிலையில் இப்போது படப்பிடிப்பு முடிந்துள்ள செய்தி, அவதார் 2 படத்தை காண ரசிகர்களை இன்னும் ஆர்வமாக்கி உள்ளது.

புதிய தேதி அறிவிப்பு படி 2022, டிச., 16ல் அவதார் 2வும், 2024 டிச., 20ல் அவதார் 3யும் ரிலீஸ் ஆக உள்ளன.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதிலாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் ... ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால்  ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

S -  ( Posted via: Dinamalar Android App )
29 செப், 2020 - 23:34 Report Abuse
S Read it as 2.79 billion.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in