18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி |
கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படாததால் ஓடிடி தளங்களில் சில புதிய படங்களை நேரடியாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ், தெலுங்கில் உருவான 'சைலன்ஸ்' படத்தையும் ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியிட உள்ளனர்.
இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தவர் அனுஷ்கா. அதனால் பட வெளியீட்டைத் தள்ளிப் போட்டார்கள். கடைசியில் வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட சம்மதித்தார்.
படத்தை வெளியிடும் அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் அவர்கள் வாங்கும் படங்களுக்கு அதில் உள்ள கலைஞர்கள் பிரமோஷன் செய்ய வர வேண்டும் என்ற கண்டிஷனை போடுவார்கள். முதலில் அனுஷ்கா சம்மதித்ததாகவும் தற்போது வர மறுக்கிறார் என்றும் சொல்கிறார்கள். அவரைத் தவிர படம் சம்பந்தப்பட்டவர்கள் தற்போது படம் பற்றி பேசி வருகிறார்கள்.
படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. ஆனால், அனுஷ்கா தரப்பில் ஒரே ஒரு வீடியோவை அவராகவே எடுத்துத் தருகிறேன். அதையே அனைத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டாராம். அந்த வீடியோவும் இன்னும் வரவில்லை. இதனிடையே, இந்த விவகாரத்தில் படத்தை வாங்கிய அமேசான் நிறுவனம் கடும் கோபத்தில் இருப்பதாகக் கேள்வி.