Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்...

29 செப், 2020 - 13:55 IST
எழுத்தின் அளவு:
Unwanted-controversy-about-SPB

இந்திய திரையிசை உலகமே கடந்த சில நாட்களாக கண்ணீர்விட்டுக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் ஒவ்வொருவரும் சமூக வலைத்தளங்களில் எஸ்பிபி பாடிய பாடல்கள், அவர்கள் கலந்து கொண்ட டிவி நிகழ்ச்சிகளின் வீடியோக்கள், அவருடைய பேட்டிகள் என பலவற்றை ஷேர் செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு ஒவ்வொருவரின் தினசரி வாழ்க்கையிலும் அவருடைய பாடல்கள் அங்கம் வகித்துள்ளது.

எஸ்பிபியின் மறைவு தாங்கிக் கொள்ள முடியாத ஒரு இழப்பு தான் என்றாலும் அவரது மறைவுக்குப் பின் தேவையற்ற சில வேண்டாத சர்ச்சைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

வீட்டுக்குள்ளேயே அமர்ந்து ரசிகர்களிடம் நன்கொடை பெற்று அவர்கள் விருப்பப் பாடலைப் பாடி அதன் மூலம் கிடைத்த தொகையை பலருக்கும் உதவிகளைச் செய்து வந்தார் எஸ்பிபி. அவரை ஐதராபாத்தில் நடந்த ஒரு டிவி நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்கு வரவழைத்ததும், சென்னையில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்கு வரவழைத்ததும் மிகப் பெரும் தவறு என அவருடைய ரசிகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

வீட்டிலேயே இருந்து சேவை செய்தவரை வெளியில் இப்படி வரவழைத்ததுதான் அவருக்கு கோவிட் வரக் காரணமாகிவிட்டது என இப்போதும் சமூக வலைத்தளங்களில் அவருடைய ரசிகர்கள் கோபப்படுகிறார்கள்.

அடுத்து, எஸ்பிபியின் மருத்துவக் கட்டணம் என ஒரு தொகையை யாரோ கிளப்பிவிட கடைசியில் நேற்று மருத்துவமனை நிர்வாகம், எஸ்பிபி மகன் சரண் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி விளக்கமளித்தார்கள்.

கொரோனா தொற்று காரணமாக பலரும் எஸ்பிபியின் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தவில்லை. இருப்பினும் விஜய், அர்ஜுன் உள்ளிட்ட சில நடிகர்கள் மட்டுமே நேரில் சென்றனர். அஜித்தை தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நாயகனாக நடிக்க சிபாரிசு செய்தவர் எஸ்பிபி தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், அஜித் நேரில் செல்லவில்லை என்றாலும் பரவாயில்லை, ஒரு இரங்கல் அறிக்கையாவது வெளியிட்டிருக்கலாமே என பலரும் வருத்தப்பட்டார்கள். அதற்கும் கூட சரண் பதிலளித்தார். அந்த பதிலிலேயே அஜித் விசாரித்தாரா இல்லையா என்பதும் புரிந்தது.

எஸ்பிபி மறைந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. அவருடைய குடும்பத்தார் அந்த இழப்பிலிருந்து மீண்டு வர இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகும். ஒரு சாதனையாளர் மறைந்துவிட்டார். அவரது மறைவுக்குப் பின் அவரைப் பற்றிய சர்ச்சைகளை புறந்தள்ளிவிட்டு, அவரது சாதனையைக் கொண்டாடுவோம் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் வெளியானது 'ப்ரீத் இன்டு தி ஷேடோவ்'தமிழில் வெளியானது 'ப்ரீத் இன்டு தி ... 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in