Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா - ஆந்திர முதல்வரின் முயற்சிக்கு கமல் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் வரவேற்பு

29 செப், 2020 - 09:43 IST
எழுத்தின் அளவு:
Bharat-Ratna-award-to-SPB---Kamal,-Seenuramasamy-welcomes-Andhra-CM-decision

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பரமணியத்துக்கு, பாரத ரத்னா வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு, நடிகரும், மக்கள் நீதிமையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்டோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக, சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னணி பாடகர், எஸ்.பி.பி., கொரோனா நோய் தொற்றி நீங்கியும் கடந்த, 25ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என ஏற்கனவே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூகவலைதளங்களிலும் இந்த கருத்து பரவலாக ஒலிக்க தொடங்கி உள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதி உள்ளார். அதில் எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இவரின் கருத்தை பலரும் வரவேற்றுள்ளனர்.

கமல்
ஜெகனுக்கு நடிகரும், மக்கள் நீதிமையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், "ஆந்திர முதல்வருக்கு எனது நன்றிகள். எங்கள் சகோதரர் எஸ்.பி.பி.,க்கு நீங்கள் தேடும் மரியாதை, தமிழகம் மட்டுமன்றி, நாடு முழுவதும் எதிரொலிக்கும்" என பதிவிட்டுள்ளார்.

சீனுராமசாமி
இதேப்போன்று இயக்குனர் சீனுராமசாமி டுவிட்டரில், "ஆந்திரமுதல்வர் ஜெகன் மோகனுக்கு நன்றி. மாண்புமிகு பிரதமர், நமது பாடகர் ரத்னா #எஸ்பிபிக்கு பாரத ரத்னா வழங்கி வாழ்த்த வேண்டுகிறேன். அதேபோல பாரதரத்னா பாலசுப்பிரமணியம் என தமிழக அரசு இளம் இசை கலைஞர்களுக்கு ஒரு விருது தந்து ஊக்குவிக்க வேண்டுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் வராதது பிரச்னையா - சரண் கோபம்அஜித் வராதது பிரச்னையா - சரண் கோபம் கேத்ரினாவை காப்பியடித்தாரா கீர்த்தி சுரேஷ் கேத்ரினாவை காப்பியடித்தாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

g g -  ( Posted via: Dinamalar Android App )
29 செப், 2020 - 10:07 Report Abuse
g g avar uyirodu irukkum poludhu idhai patri yen yaarum pesa villai?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in