Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரேம்ஜிக்கு எப்போ கல்யாணம்..? எஸ்பிபியின் கடைசி கலகல வீடியோ

28 செப், 2020 - 19:35 IST
எழுத்தின் அளவு:
SPB-last-fun-video-with-Gangai-Amaran-family

இசையமைப்பாளர் எஸ்பி பாலசுப்ரமணியன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காலமானார். இவரது மரணம் இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய இழப்பாகவும் அதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது. இந்த நிலையில் எஸ்பிபியின் பழைய வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகின்றன.

அந்த வகையில் கொரோனா தாக்கம் கடுமையாக இருந்த காலகட்டத்தில், இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக ஸ்டுடியோவில் நடைபெற்ற ஆன்லைன் கச்சேரியில் கலந்துகொண்ட எஸ்பிபி, வீடியோ காலிங் மூலமாக, கங்கை அமரன் மற்றும் வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோருடன் உரையாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த நிகழ்ச்சியில் எஸ்பிபியுடன் கலந்து கொண்ட அவரது மகன் எஸ்பிபி சரண், தனது தந்தைக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக, கங்கை அமரனுக்கு வீடியோ கால் செய்து, நீண்டகால நெருங்கிய நண்பர்களான இருவரையும் பேச வைத்தார். இதில் ஜாலியாகவும் மகிழ்ச்சியாகவும் தங்களைப் பற்றிய பழைய நினைவுகளை பரிமாறிக் கொண்டனர் எஸ்பிபியும் கங்கை அமரனும். கங்கை அமரன் பேசிக் கொண்டிருந்தபோதே வீடியோவில் அவரது மகன்கள் வெங்கட் பிரபுவும் பிரேம்ஜியும் காட்டினார்கள்.

அப்போது பிரேம்ஜியை பார்த்து எஸ்பிபி, “இவனுக்கு எப்படா கல்யாணம் பண்ணி வைக்க போறீங்க..?” என்று கேட்கிறார். அதற்கு பிரேம்ஜி ஒன்றும் பதில் சொல்லாமல் இருக்க, அவரது அண்ணன் வெங்கட் பிரபு, “அவன் அப்படித்தான் அங்கிள்.. கல்யாணமே பண்ணிக்காம தனியா சுத்தலாம்னு நினைக்கிறான்” என்று பதில் சொல்கிறார்.. கொரோனா தாக்குதலுக்கு எஸ்பிபி ஆளாவதற்கு முன்பு, அவர் எவ்வளவு துடிப்புடனும் சுறுசுறுப்புடனும், திடகாத்திரமாக வலம் வந்துள்ளார் என்பதை இந்த வீடியோ தெளிவாக உணர்த்துவதுடன் காண்போரின் நெஞ்சையும் நெகிழ வைக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முகெனை வெற்றி நாயகனாக்குமா 'வெற்றி'!முகெனை வெற்றி நாயகனாக்குமா ... இந்தியில் ரீமேக் ஆகிறது மாநகரம் இந்தியில் ரீமேக் ஆகிறது மாநகரம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in