Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்பிபி மரணம், சிகிச்சை கட்டணம் பற்றிய வதந்தி - எஸ்பிபி சரண் விளக்கம்

28 செப், 2020 - 17:34 IST
எழுத்தின் அளவு:
SPB-Charan-clarification-about-his-father-treatment-and-cost-issue

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபியின் மரணம் திரையுலகையும், இசை ரசிகர்களையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சூழ்நிலையிலும் சில விஷமிகள் எஸ்பிபியின் மரணம் குறித்து விரும்பத்தகாத சில தகவல்களை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக எஸ்பிபியின் மகனும், நடிகருமான சரணின் கவனத்திற்கு சென்றது. அதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பது பற்றி விளக்கமாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை குறித்தும் என் அப்பாவுக்கான சிகிச்சைக் கட்டணம் குறித்தும் சில வதந்திகள் உலவுவது துரதிர்ஷ்டவசமானது. சில விஷயங்களை மொத்தமாகத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அப்பா மருத்துவமனையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்பா கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலமானார். மொத்தமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறித்து வதந்தி ஒன்று வந்திருக்கிறது. நாங்கள் ஏதோ பணம் கட்டியதாகவும், ஆனால் இன்னும் பணம் பாக்கி இருந்ததாகவும், பின்னர் தமிழக அரசிடம் அதற்காகக் கோரியதாகவும், அவர்கள் மறுத்ததால் குடியரசுத் துணைத் தலைவரிடம் நான் கோரிக்கை வைத்ததாகவும் அவர்கள் உடனடியாக அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் ஒரு செய்தி உலவுகிறது. மேலும் நாங்கள் பாக்கி பணத்தை தரும் வரை அப்பாவின் உடலை எம்ஜிஎம் மருத்துவமனை ஒப்படைக்கவில்லை என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். இவை அனைத்தும் சுத்த அபத்தங்கள். பொய்கள். இதை ஏன் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. சம்பந்தப்பட்டவர்களை இது எப்படிப் பாதிக்கும் என்பது கூட புரியாமல், பேசித் தெரிந்து கொள்ளாமல் ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. இதுபோன்ற மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது வருத்தத்தைத் தருகிறது.

இவர்கள் எஸ்பிபியின் ரசிகர்களாக இருக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் இப்படியான ஒரு காரியத்தைச் செய்ய மாட்டார்கள். அவர்கள் மற்றவர்களைக் காயப்படுத்தவே மாட்டார்கள். இதுபோன்ற வதந்திகளைப் பரப்பும் நபரை எஸ்பிபி மன்னிப்பார். நான் இந்த நபரை மன்னிக்கிறேன். ஆனால், இவர் சற்று முதிர்ச்சியடைய வேண்டும். ஒழுங்காக யோசிக்க வேண்டும். சரியான விஷயத்தைச் செய்ய வேண்டும்.

ஒருவரின் செயல் எவ்வளவு அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது என்பது வருத்தமாக இருக்கிறது. எங்கள் குடும்பத்தில் நடந்து வரும் விஷயங்களால் ஏற்பட்டிருக்கும் மனவலிக்கு நடுவில் பத்திரிகையாளர்களை ஒரு இடத்தில் ஒன்றுகூட்டி, பேசுவதெல்லாம் எவ்வளவு அசந்தர்ப்பமானது என்பது அவருக்குத் தெரியவில்லை.

மருத்துவமனைக் கட்டணங்கள் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும். ஆனால், அதுவரை தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள்” என சரண் கேட்டுக் கொண்டுள்ளார்.

கூட்டாக சந்திப்பு
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.பி.பி. சரண் மற்றும் எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகிகள் இன்று(செப்., 28) கூட்டாக நிருபர்களை சந்தித்து சிகிச்சை கட்டணம் தொடர்பாக விளக்கமளித்தனர்.

அப்போது சரண் கூறுகையில், எஸ்.பி.பி.,க்கான மருத்துவ செலவு கட்டணம் செலுத்துவதில் எந்த பிரச்னையும் இருந்ததில்லை. சிகிச்சை கட்டணம் குறித்து வெளியான தகவல் தவறானது. எஸ்பிபி சிகிச்சைக்கு நாங்களும், மருத்துவ காப்பீடு மூலமும் அவ்வபோது கட்டணம் செலுத்தி வந்தோம். அவர் மறைவுக்கு பின்னர் சிகிச்சை கட்டணம் பற்றி கேட்ட போது வேண்டாம் என மருத்துவமனை கூறிவிட்டது. மருத்துவமனை தலைவர் பணம் வாங்க மறுத்து உடலை பத்திரமாக அனுப்பி வைத்தார். எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என அரசு கூறியிருந்தது. கட்டணத்தை செலுத்த யாருடைய உதவியையும் நாடவில்லை. கொரோனா காரணமாக எஸ்.பி.பி., மரணமடையவில்லை. நுரையீரல் தொற்று காரணமாகவே உயிரிழந்தார். எதிர்பாராத மரணம் என்பதால், அதனை ஜீரணிக்க நீண்ட காலமாகும் என்றார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
சோனு சூட்-ஐ வரவேற்றுப் பாராட்டிய பிரகாஷ்ராஜ்சோனு சூட்-ஐ வரவேற்றுப் பாராட்டிய ... முகெனை வெற்றி நாயகனாக்குமா 'வெற்றி'! முகெனை வெற்றி நாயகனாக்குமா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

29 செப், 2020 - 20:41 Report Abuse
ருத்ரா வதந்திக்கு, மாபெரும் பாடகர் இல்லத்தில் இருந்து பதில் தரவேண்டாம் சரண் Sir. just ignore செய்து விடுங்கள்
Rate this:
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
29 செப், 2020 - 03:04 Report Abuse
Dr.C.S.Rangarajan உடல் நலிவுற்ற நிலையில் வியாதியுடனும் அதனால் விளையும் வலிதனையும் பொறுத்துக் கொள்ளலாம் என்றாலும் பொறுக்கமுடியாத, வாழ்வதை விட 'சாவதே மேல்' என பொறுக்கமுடியாத வலிதனை ஏற்படுத்தவது 'மருத்துவமனையின் பில் தான்' என்றால் சரியா, தவறா? காரோண மருத்துவ மனைகளுக்கு தெய்வம் தந்த மாபெரும் பரிசு.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
28 செப், 2020 - 18:42 Report Abuse
Endrum Indian இந்த டப்பா தட்டுதலிலேயே புரிஞ்சி போச்சி அந்த வதந்தி உண்மை தான் கெலிவ் 1) எவ்வளவு நாள் ஆஸ்பத்திரியில் எவ்வளவு பணம் 2) யார் கட்டியது இந்த இரண்டையும் சொல்லாமல் சுற்றி வளைத்து என்ன பேச்சு அப்போ செலவு ரூ 3 கோடியா இல்லியா இந்த 51 நாட்களுக்கு ஆஸ்பத்திரியில்
Rate this:
g g - ,
29 செப், 2020 - 00:35Report Abuse
g g thambi emdrum indian..avanga appa..avaru selavu seiraaru...unakku edhukku avaru sollanum.....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in