Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்பிபி பெயரில் இசை பல்கலைக்கழகம் : சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்

28 செப், 2020 - 12:18 IST
எழுத்தின் அளவு:
Music-university-in-the-name-of-SPB---Demads-former-Chief-minister-Chandrababu

இந்தியத் திரையுலகின் மாபெரும் கலைஞனாக விளங்கிய எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நலக் குறைவு காரணமாக சில நாட்களுக்கு முன் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், தாதாசாகேப் பால்கே விருது வழங்க வேண்டும், சிறந்த பாடகருக்கான தேசிய விருதை அவரது பெயரில் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் வைத்து வருகிறார்கள்.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, எஸ்பிபி பெயரில் ஒரு இசைப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எஸ்பிபியின் சொந்த ஊரான நெல்லூரில் அந்த நினைவு இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். அங்கு அவரின் வெண்கலச்சிலை ஒன்றை நிறுவ வேண்டும். சங்கீத அகாடமியின் பெயரை எஸ்பிபி பெயருடன் மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.

“இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்துவது, மாநிலத்தின் கலை தரத்தை உயர்த்துவது ஆகியவையே எஸ்பிபிக்கு அளிக்கும் சரியான அஞ்சலியாக இருக்கும்,” என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் அதிகப் பாடல்களைப் பாடியுள்ள எஸ்பிபிக்கு தென்னிந்திய மாநில அரசுகள் அவரது பெருமைக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் என்னென்ன செய்யப் போகிறார்கள் என்பது இனி வரும் காலங்களில் தெரியும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
எஸ்பிபி பற்றி புகழ்ந்த அமிதாப்பச்சன்எஸ்பிபி பற்றி புகழ்ந்த ... நைட்டிங்கேள் ஆப் இந்தியா லதா மங்கேஷ்கருக்கு இன்று பிறந்தநாள் நைட்டிங்கேள் ஆப் இந்தியா லதா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
28 செப், 2020 - 15:56 Report Abuse
Bala Murugan எனக்கு ஒரு சிறு சந்தேகம் - எதற்காக பல பிரபலங்கள் இறந்த பிறகு அவர்களை கௌரவிக்க அவர்களுடைய பெயரில் இது, அது மற்றும் புதிய கட்டிடங்கள் என்று பெயர் சூட்டுகிறீர்கள்? எஸ்பிபி அவர்கள் உயிரோடு இருக்கும்போதே பல வருடங்களுக்கு முன்பே சாதனை புரிந்தவர்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in