Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்புவின் புதிய லுக் காண போஸ்டர் ஒட்டிய மதுரை ரசிகர்கள்

28 செப், 2020 - 10:25 IST
எழுத்தின் அளவு:
Madurai-fans-demands-to-show-Simbu-new-look

வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. பல பிரச்னைகளை கடந்து இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நின்று போய் உள்ளது. இப்படத்திற்காக வெளிநாடு சென்று உடல் எடையை குறைத்தார் சிம்பு.

இந்நிலையில் ஊரடங்கு காலத்தை தனது பயனுள்ளதாக்கி மேலும் 21 கிலோ எடையை குறைத்துள்ளார். இந்த தகவலை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒரு பேட்டியில் கூறினார். அப்போது இருந்தே சிம்புவின் புதிய தோற்றத்தை காண ரசிகர்கள் ஆவலாய் இருந்தனர். சமூகவலைதளங்களில் அவரின் புதிய தோற்றம் குறித்த ஒரு போட்டோவாவது விடுங்கள் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.



இந்நிலையில் மதுரையில் உள்ள சிம்பு ரசிகர்கள் (வெறியர்கள்) ஒரு படி மேலே போய், சிம்புவின் புதிய தோற்றத்தை காண ஆவலாய் இருப்பதாக கூறி போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர். போஸ்டர் டிசைனில் டி.ராஜேந்தர், வெங்கட் பிரபு, சுரேஷ் காமாட்சி, யுவன் ஷங்கர் ராஜா, ஹரிஷ் கல்யாண், மகத், விடிவி கணேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் படங்களை இணைத்து, சிம்புவின் புதிய தோற்றத்திற்கான உருவத்திற்கான இடத்தையும் அதில் ஒதுக்கியிருக்கிறார்கள். இந்த போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலானது.

இதே ரசிகர்கள் தான் சில ஆண்டுகளுக்கு முன் சிம்புவின் பிறந்தநாள் வந்தபோது மதுரையில் 500 அடி நீளத்திற்கு போஸ்டர் ஒட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'கலைஞர்களுக்கு அதிக வாய்ப்பு!''கலைஞர்களுக்கு அதிக வாய்ப்பு!' விளம்பரங்களிலும் கல்லா கட்டும் லாஸ்லியா விளம்பரங்களிலும் கல்லா கட்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

28 செப், 2020 - 11:11 Report Abuse
ILAIYARAJA ennada ithu maduraiku vantha sothanai...... namakellam kadaisi varaikum edapadi than pola..... Corona ivanugala konnudu......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in