Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்பிபி-க்கு நிறைவேறாமல் போன ஆசை

27 செப், 2020 - 17:39 IST
எழுத்தின் அளவு:

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்று சொல்வார்கள். ஆகஸ்ட் 5ம் தேதி பேஸ்புக்கில் ஒரு வீடியோவில் லேசான கொரானோ தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். விரைவில் வந்துவிடுவேன் என்று சொன்னார் எஸ்பிபி. ஆனால், இரு தினங்களுக்கு முன்பு நம்மை விட்டுப் பிரிந்தார்.

தனது குடும்பத்தினர், உறவினர்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தவர் எஸ்பிபி. அவருடைய பெற்றோர் சிலையை அவரது சொந்த ஊரான ஆந்திர மாநிலம், நெல்லூர் நகரத்தில் உள்ள திப்பராஜு தெருவில் உள்ள வீட்டில் வைக்க வேண்டும் என்று விரும்பி அவர்களது சிலைகளை செய்யச் சொல்லி இருந்தார்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கொத்தபேட்டா என்ற இடத்தைச் சேர்ந்த சிற்பி ராஜ்குமார் என்பவர் எஸ்பிபியின் பெற்றோர்கள் சாம்பமூர்த்தி, சகுந்தலாம்மா ஆகியோரது சிலைகளைச் செய்து வந்தார். அவரிடம் தன்னுடைய சிலை ஒன்றையும் செய்யச் சொல்லி இருக்கிறார் எஸ்பிபி.

தனது சொந்த ஊரில் இருந்த வீட்டை காஞ்சி சங்கர மடத்திற்குத் தானமாகக் கொடுத்துவிட்டார் எஸ்பிபி. அந்த வீட்டில் அவருடைய பெற்றோர் சிலைகளை கடந்த ஆகஸ்ட் மாதம் வைக்க முடிவு செய்திருந்தார். ஆனால், அதற்குள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவிட்டார்.

எஸ்பிபியின் ஆசையான அவருடைய பெற்றோர் சிலையை அவர்களது சொந்த ஊரில் எஸ்பிபியின் மகன் சரண், மகள் பல்லவி நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், எஸ்பிபியின் சிலையும் அந்த வீட்டிலேயே வைக்கப்படுமா அல்லது அவர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் வைக்கப்படுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

அவரது பண்ணை வீட்டில் மணிமண்டபம் கட்டவும் சரண் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதற்கு ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா மாநில அரசுகளும் உதவி செய்தால் சிறப்பாக இருக்கும் என்பது திரையுலகத்தினரின் கருத்தாக உள்ளது. அந்தப் பண்ணையை எஸ்பிபியின் நினைவிடமாகவும் மாற்றலாம். அவர் வாங்கிய விருதுகள், அவரைப் பற்றிய புகைப்படத் தகவல்கள், திரைப்படத் தகவல்களை அங்கு இடம் பெற வைக்கலாம்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் செயலை பாராட்டும் திரையுலகினர், ரசிகர்கள்விஜய் செயலை பாராட்டும் ... மீன் வியாபாரியான வடிவுக்கரசி! மீன் வியாபாரியான வடிவுக்கரசி!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Logan - Toronto,கனடா
29 செப், 2020 - 00:05 Report Abuse
Logan தென்றல் தெவிட்டும் தேமதுரத் தமிழோசை தென்னாடு தந்த தெலுங்கு மைந்தன் தென்றலாய் வலம் வந்தான் தேனிசையில் என்றும் பாலனாய்ப் பவனி வந்தான் இன்னிசையிலே பல புதுமைகள் செய்தான் இன்பமுடன் இனிய சங்கதிகள் கூட்டி இன்பப் பாடல்கள் பலவும் பாடி இன்புற வைத்தான் இன்பம் பல கூட்டி காலங்கள் கடந்தாலும் மறந்து விடாது காதுகள் மறந்தாலும் மறக்க விடாது தாளங்கள் பிழைத்தாலும் தவிக்க விடாது இராகங்கள் வைத்தான் மறந்து விடாது உன்னிசை கேட்டவன் உலகையும் மறந்தான் உன்னிசை கேட்டவன் துயரையும் மறந்தான் உன்னிசை கேட்டவன் தன்னையும் மறந்தான் உன்னிசை தானே உலகம் என்றிருந்தான் பல்லாயிரம் பாடல்கள் கேட்டு மகிழ்ந்தாலும் பண்ணாயிரம் கேட்கப் பரிதவிக்கும் மனங்கள் இங்கே படுக்கையிலிருந்து மீண்டு வருவாய் என்றே படைத்தவனை வேண்டி ஏங்கிய உள்ளங்களிங்கே படைத்தவன் முடிவில் மாற்றங்கள் இல்லை காலம் வந்துவிட்டால் காலனும் தாமதிக்கான் காலம் கடந்தாலும் உன் பாடலிசையினால் பாலன் நீ பாலசுப்பிர மணியன்தான் ஈர்பத்து வயதினிலே இன்னிசையில் ஈடுபட்டு இவ்வுலக வாழ்வுதனை இசைதனுக்கே அர்ப்பணித்து நல்லுலகம் போற்றும் இசையின் பாலனாய் தந்தஇசை போதுமென்று இறைவன் நினைத்தானோ சென்றுவா சென்றுவா என்றே சொன்னாலும் எம் மனம் ஆறாத்துயரில் வாடுதிங்கே ஜனனம் உண்டென்றால் மரணம் உண்டு என்று அமைதி கொண்டு உன் ஆத்மா சாந்தியடைக.
Rate this:
s vinayak - chennai,இந்தியா
28 செப், 2020 - 15:39 Report Abuse
s vinayak தனக்கு மிஞ்சிய பிறகுதான் தானம் தர்மம் செய்திருக்க வேண்டும். இப்போது தனிப்பட்ட முறையில், தனிப்பட்ட இடத்தில் மணி மண்டபம் கட்ட அரசிடம் உதவி கேட்க நினைப்பது அழகல்ல.
Rate this:
Aanandh - thamizhnaadu,இந்தியா
28 செப், 2020 - 01:25 Report Abuse
Aanandh கேட்பதற்கு நகைச்சுவையாகத் தோன்றினாலும், இன்னைக்கு செத்தால் நாளைக்குப் பால் என்பது. நாள் செல்லச்செல்ல உற் றவர் தவிர மற்றவர்கள் நினைக்கக்கூட நேரமில்லாமல்தான் இருப்பார்கள். இது மறுக்க முடியாத உண்மை. தற்போதைய சூழ்நிலையில் உற்றவர்களுக்கும் ஆயிரம் பிற கவலைகள். இவர் போன்ற கலையுலக பொக்கிஷங்கள் பலபேர், சிவாஜி கணேசன், கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன், என்.எஸ்.கே போன்ற சில உதாரணங்கள். அரசியலில் இருந்த சில பிரபலங் களை மட்டும், அவர்களை வைத்து ஆதாயம் இருந்தால் மட்டு ம், போதைக்கு ஊறுகாய் மாதிரி தேவை வரும் பொது மட்டும், விளம்பரத்திற்காக நினைவு கொண்டாடுவார்கள். ஒரு உதார ணம் கர்மவீரர் காமராஜ். இது வாழ்பவர்களுக்கு மாரடிக்கும் கூட்டம். ஆதாயம் இல்லை என்றால் நன்றி பாராட்டுவதுகூட பதினைந்து நாட்களுக்குப்பின் தேய்பிறைதான். யாரையும் கு ற்றம் சொல்ல முடியாது. தற்சமய உலக சூழ்நிலை. விமர்சிக்க ஏதும் இல்லை.
Rate this:
Kumar Senthil - Raleigh,யூ.எஸ்.ஏ
29 செப், 2020 - 00:14Report Abuse
Kumar Senthilநிதர்சனமா உண்மைதான். காலத்தால் எது வருமோ அந்த மரியாதை அவர்க்கு கிடைக்கும். அதை மாற்றவோ மறுக்கவோ முடியாது. வாழ்க வளமுடன்....
Rate this:
RAVI - Hyderabad,இந்தியா
27 செப், 2020 - 23:36 Report Abuse
RAVI ஈடு இணையற்ற கலைஞர் , அவருடைய பாடல்கள் மனதுக்கு இதம் தரும், அழுகை, சிரிப்பு , வீரம், அன்பு மற்றும் அனைத்து உணர்ச்சிகளையும் பாட்டிலேயே காண்பித்தவர் . அரசாங்கம் , தமிழ் பிலிம் இண்டஸ்ட்ரி அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும்..
Rate this:
Rajagopal - Chennai,இந்தியா
27 செப், 2020 - 21:33 Report Abuse
Rajagopal அதி அற்புதமான மனிதர். அந்த அளவு புகழில் என்ன ஒரு அடக்கம். Great man.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in