Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் செயலை பாராட்டும் திரையுலகினர், ரசிகர்கள்

27 செப், 2020 - 15:17 IST
எழுத்தின் அளவு:
Movie-goers-and-fans-praised-Vijay

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய சாதனையாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று முன்தினம் சென்னையில் காலமானார். அவருடைய உடல், சென்னைக்கு அருகில் தாமரைப்பாக்கம் என்ற ஊரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


கொரானோ தொற்று காலமான இந்தக் காலத்தில் தங்களுக்காக அதிக சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடிய எஸ்.பி.பி., நல்லடக்கத்திற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன் உள்ளிட்ட நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. ர்ஜுன், ரகுமான் உள்ளிட்ட சில சீனியர் நடிகர்கள் மட்டுமே சென்றனர். ஆனால், தனக்காக அதிகப் பாடல்களைப் பாடாத எஸ்.பி.பி.,யின் நல்லடக்கத்திற்கு விஜய் தாமரைப்பாக்கத்திற்கே சென்று அஞ்சலி செலுத்தியது பலரையும் நெகிழ வைத்துள்ளது. விஜய்க்காக மிகக் குறைவானப் பாடல்களைப் பாடியவர் எஸ்.பி.பி., விஜய்யுடன் சில படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார். ஒரு சாதனையாளருக்கு செலுத்த வேண்டிய இறுதி மரியாதையை மிகச் சரியாக விஜய் செய்துவிட்டார் என நேற்று சமூக வலைத்தளங்களில் திரையுலகினர் பலரும் அவரைப் பாராட்டினர்.


எஸ்பிபி நல்லடக்கம் செய்த பண்ணை வீட்டிற்கு விஜய் வந்த போது, அங்கு நெருக்கடி ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது யாருடைய செருப்பையோ எடுத்து விஜய் கொடுத்தது அவருடைய ரசிகர்களை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. விஜய்யின் இந்த எளிமையான செயலுக்கு அவருடைய ரசிகர்கள் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.


கொரானோ தொற்று பயம் இருக்கும் நிலையில், பல முன்னணி நடிகர்கள் வராத போதும், சிலர் அறிக்கை கூட விடாத போதும் கூட்டத்திற்கிடையில் விஜய் நேரில் வந்து சென்றது எஸ்.பி.பி., மீது அவர் வைத்திருக்கும் மரியாதையைக் காட்டுவதாக உள்ளது.


Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
எஸ்.பி.பி. பெயரில் தேசிய விருது - கேயார் கோரிக்கைஎஸ்.பி.பி. பெயரில் தேசிய விருது - ... எஸ்பிபி-க்கு நிறைவேறாமல் போன ஆசை எஸ்பிபி-க்கு நிறைவேறாமல் போன ஆசை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Rangiem N Annamalai - bangalore,இந்தியா
29 செப், 2020 - 18:06 Report Abuse
Rangiem N Annamalai ஏன் கேலி செய்துகொண்டு உள்ளீர்கள் ?.பாராட்டலாம் .
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
28 செப், 2020 - 18:52 Report Abuse
Endrum Indian ஒரு சிறு விஷயம் இது இதை டப்பா அடிபபதிலிருந்து மிக நன்றாகத் தெரிகின்றது இதுவும் சினிமா ஸ்டைலில் ஏற்கனவே சொல்லி செய்யப்பட்டது என்று???விஜய் தலை முடியும் முகமும் பார்த்தீர்களா எங்கள் வீட்டுக்கு 20 லி தண்ணீர் பாட்டில் கொன்டுவந்து போடும் பைய்யன் போலவே இருக்கின்றார்.
Rate this:
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
29 செப், 2020 - 13:15Report Abuse
Tamilachiஷூ போட்டுக்கிட்டு கரும்போ தோட்டத்துக்குள்ள சிமெண்ட் போட்டு அதுமேல நடந்து ஷூட்டிங் பண்ற மாதிரின்னு நினைசீங்களா? அவர் என்ன மேக் அப் போட்டுட்டு வந்தாருன்னு இந்த அறிவு ஜீவி சொன்ன நல்லா இருக்கும்.......
Rate this:
San -  ( Posted via: Dinamalar Android App )
28 செப், 2020 - 05:38 Report Abuse
San Sila chunkys edhaiyum vesham endru than solvargal
Rate this:
28 செப், 2020 - 00:58 Report Abuse
Durai Ajith அப்படியெல்லாம் விஜய் செய்வதற்கு காரணம் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பணிவு தான்அப்படி செய்தால்தான் வருங்காலத்தில் முதலமைச்சர் ஆகலாம் என்று ஒரு கனவு விஜய்க்கு
Rate this:
27 செப், 2020 - 23:55 Report Abuse
Vijay,covai அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in