Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்தை அமராவதி படத்திற்கும் சிபாரிசு செய்த எஸ்.பி.பி.,

27 செப், 2020 - 13:26 IST
எழுத்தின் அளவு:
SPB-RECOMMENDED-TO-AJITH

இந்தியத் திரையுலகின் மறக்க முடியாத கலைஞனாக பெயரெடுத்தவர் மறைந்த எஸ்.பி.பி., அனைவரிடமும் அன்பாகவும், பண்பாகவும், மனித நேயத்துடனும் பழகியவர் என பலரது இரங்கல் செய்தியில் அவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.


அப்படிப்பட்டவரின் மரணத்திற்கு இதுவரையிலும் ஒரு இரங்கல் செய்தி கூட தெரிவிக்காத அஜித் பற்றி சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக காரசாரமான பதிவுகள் போய்க் கொண்டிருக்கிறது.


எஸ்.பி.பி.,யின் மகன் சரணும், அஜித்தும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். மகனின் நண்பன் என்பதால் அஜித் முதன் முதலில் நடிகராக அறிமுகமான பிரேம புஸ்தகம் படத்தின் தயாரிப்பாளரிடம் சிபாரிசு செய்தவர் எஸ்.பி.பி.,தான். அது மட்டுமல்ல தமிழில் அஜித் கதாநாயகனாக அறிமுகமான அமராவதி படத்திலும் அப்படத்தின் இயக்குனர் செல்வாவிடம் அஜித்தைப் பற்றிக் கூறி சிபாரிசு செய்தது எஸ்.பி.பி., தான் என தெரிய வந்துள்ளது.


இந்த விவரத்தை அமராவதி படத்தை இயக்கிய செல்வா எஸ்பிபிக்காக வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில் தெரிவித்துள்ளார். “நான் முதன் முதலில் இயக்கிய தலைவாசல் படத்தின் நாயகன் எஸ்.பி.,தான்.நான் இரண்டாவது படமாக அமராவதி படத்தை இயக்க ஆரம்பித்த போது அஜித்தைப் பற்றி என்னிடம் சொன்னதும் அவர்தான்,” என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.


இயக்குனர் செல்வாவின் மனைவி சில வருடங்களுக்கு முன்பு மரணமடைந்துள்ளார். அந்த மரணத்திற்குக் கூட அஜித் போகவில்லை என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தான் நடிகராக அறிமுகமாகக் காரணமாக இருந்த எஸ்.பி.பி., மறைவுக்காக விஜய் போல் நேராகச் சென்று அஞ்சலி செலுத்தவில்லை என்றாலும் ஒரு இரங்கல் அறிக்கையாவது அஜித் வெளியிட்டிருக்கலாமே என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது.


ஆனால், எஸ்.பி.பி.,யின் மகன் சரணைத் தொடர்பு கொண்டு அஜித் தனது இரங்கலைத் தெரிவித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். இருப்பினும் மக்கள் தெரிந்து கொள்ளும் அளவிற்கு ஒரு அறிக்கை வெளியிடாமல் போனது ஏன் என்றுதான் தெரியவில்லை.


Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
இளையராஜா வீடியோவை முத்தமிட்ட எஸ்.பி.பி.,இளையராஜா வீடியோவை முத்தமிட்ட ... நிசப்தத்துக்காக சர்வதேச சைகை மொழியை கற்ற அனுஷ்கா நிசப்தத்துக்காக சர்வதேச சைகை மொழியை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

R krishnamoorthy - Muscat ,ஓமன்
28 செப், 2020 - 13:39 Report Abuse
R krishnamoorthy அஜித் மிகவும் நல்லவர்.
Rate this:
karve -  ( Posted via: Dinamalar Android App )
28 செப், 2020 - 09:41 Report Abuse
karve Facebook Twitter ல போஸ்ட் போடனும்.. இல்லனா மீடியாக்கு சொல்லிட்டுத்தான் எல்லாமே செய்யனுமா?? அஜித் முன் பின் தெரியாதவர்களுக்கே பல நல்ல விஷயங்களை செய்பவர்.. இந்த விஷயத்தில் ஒதுங்கி இருப்பாரா?? போய் வேலையை பாருங்கப்பா..
Rate this:
28 செப், 2020 - 06:52 Report Abuse
chandran, pudhucherry பத்திரிகையில் சொன்னால்தான் ஒத்துப்பீங்களா. தனிப்பட்ட விஷயங்களை கிளராதீங்க. தல விளம்பரங்களை விரும்பாதவர். நடிப்பை ஒரு தொழிலா மட்டுமே நினைப்பவர். நடிகர்கள் இவரை போல இருக்கனும். அதாவது நடிப்போட நிறுத்திகனும்
Rate this:
Raja -  ( Posted via: Dinamalar Android App )
27 செப், 2020 - 19:40 Report Abuse
Raja Thala do not like publicity..he is a nice gentleman..
Rate this:
27 செப், 2020 - 19:23 Report Abuse
vimal.k Raj எல்லாம் பணம், பேர், புகழ் இருக்கும் திமிரு..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in