Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜா வீடியோவை முத்தமிட்ட எஸ்.பி.பி.,

27 செப், 2020 - 13:11 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-Video-Release-about-Spb

இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்குப் பின் அவரைப் பற்றிய பல தகவல்கள், அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. பலரும் எஸ்.பி.பி.,யின் பாடல்களைப் பற்றி புகழாரம் சூட்டி வருகின்றனர்.


எஸ்.பி.பி.,யும் இளையராஜாவும் 50 வருடங்களுக்கம் மேலாக நட்புடன் இருப்பவர்கள். இளையராஜா இசையில் எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். எஸ்.பி.பி., கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என இளையராஜா 'சீக்கிரம் எழுந்து வா பாலு' என உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.


அந்த வீடியோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி.,யிடம் அவரது மகன் சரண் காட்டினாராம். அவரிடமிருந்து போனை வாங்கிய எஸ்.பி.பி., மீண்டும் அந்த வீடியோவை போடச் சொல்லி இளையராஜாவை முத்தமிட்டாராம். இந்தத் தகவலை அந்த மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களில் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.


நண்பன் எஸ்.பி.பி.,யின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றி வழிபட்டுள்ளார் இளையராஜா. ஒரு சிறு பிரிவுக்குப் பின் மீண்டும் நெருக்கமாக இணைந்த நண்பர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் எனக்கு  பிடிக்கலை - லட்சுமி மேனன் கோபம்பிக்பாஸ் எனக்கு பிடிக்கலை - லட்சுமி ... அஜித்தை அமராவதி படத்திற்கும் சிபாரிசு செய்த எஸ்.பி.பி., அஜித்தை அமராவதி படத்திற்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in