Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் எனக்கு பிடிக்கலை - லட்சுமி மேனன் கோபம்

27 செப், 2020 - 12:44 IST
எழுத்தின் அளவு:
I-didnt-like-bigboss---Lakshmi-menon

தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முன்னணி நடிகையாக இருந்தவர் லட்சுமி மேனன். தற்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் வீட்டில் இருக்கிறார். அதனால், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி காட்டமான ஒரு பதிவிட்டிருந்தார். அதில், “பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கு பெறவில்லை. இப்போதும், எப்போதும் அடுத்தவர்களின் பிளேட்டுகளைக் கழுவுவது, டாய்லெட்டுகளைக் கழுவுவது ஆகியவற்றை செய்ய மாட்டேன். அது மட்டுமல்ல கேமரா முன்னாடி ஷோவுக்காக சண்டை போட்டுக் கொள்வதும் பிடிக்காது. ஒரு மோசமான ஷோவுக்காக நான் போவேன் என யூகங்களின் அடிப்படையில் என்னிடம் வராதீர்கள்,” எனப் பதிவிட்டிருந்தார்.


டாய்லெட் க்ளீன் செய்வது, பிளேட்டுகளைக் கழுவுவது ஆகியவை தரக்குறைவான வேலையா என ரசிகர்கள் அவரை கேள்வி மேல் கேள்வி கேட்டிருந்தனர். அதற்குப் பதிலாக வீடியோவை வெளியிட்டுள்ளார் லட்சுமி மேனன்.


அதில், “என் உரிமை, என் விருப்பம், என்னைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை. இந்த ஷோ வந்து நிறைய பேருக்குப் பிடிக்கும், பிடிக்காம போகலாம். நிறைய காரணங்களுக்காக எனக்குப் பிடிக்கலை. அதனால, நான் அதுக்குப் போகலை. என் வீட்டுல டாய்லெட் க்ளீன் பண்றது, ப்ளேட் க்ளீன் பண்றது நான்தான் பண்ணுவேன்.


அதை ஒரு ஷோவுல பண்ண வேண்டிய தேவை எனக்கில்லை. எந்த ஆதாரமும் இல்லை யூகத்துல இப்படி எழுதறதும், எனக்கு நெருக்கமானவங்களும் இந்த நிகழ்ச்சிக்குப் போறீங்களான்னு கேக்கும் போது கஷ்டமா இருக்கு. மத்தவங்க விருப்பத்தைப் பத்தி நீங்க யாரும் கேக்க உரிமை கிடையாது,” என கோபமான வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மாற்றி மாற்றி பேசும் ஐஸ்வர்யா ராஜேஷ் ; மீண்டும் ஒரு சர்ச்சைமாற்றி மாற்றி பேசும் ஐஸ்வர்யா ... இளையராஜா வீடியோவை முத்தமிட்ட எஸ்.பி.பி., இளையராஜா வீடியோவை முத்தமிட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

kumaresan - Petaling Jaya,மலேஷியா
28 செப், 2020 - 07:44 Report Abuse
kumaresan உன் கருத்துக்கு தலை வணங்குகிறேன் அம்மா சரியாக நியாயப்படுத்தியுள்ளீர்கள் பணம் சம்பாதிப்பதில் தன்மானமும் தேவை என்பதனை நன்கு உணர்த்தியுள்ளீர்கள்
Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
27 செப், 2020 - 17:38 Report Abuse
Indhuindian அம்மணி சொல்வது சரிதானே காசுக்காக ஒரு ஷோவுக்காக இதையெல்லாம் செய்ய வேண்டுமா. காசு தான் வேண்டும் என்றால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற திரை உலக சட்டத்தை எதிர்த்ததில் என்ன தவறு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in