பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் |
திருவண்ணாமலை : மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றியிருக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா.
கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அந்நோயிலிருந்து குணமாகி, மாரடைப்பால் காலமானார் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவரது உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் இன்று(செப்., 26) நல்லடக்கம் செய்யப்பட்டது.
எஸ்.பி.பி.யின் மறைவுக்கு ஏற்கனவே இளையராஜா இரங்கல் தெரிவித்து இருந்தார். அதில் எஸ்.பி.பி. இல்லாத உலகம் தனக்கு சூன்யமாக தெரிவதாக கூறியிருந்தார். இந்நிலையில் எஸ்.பி.பி.யின் ஆன்மா சாந்தியடைய வேண்டி திருவண்ணாமலையில் உள்ள ரமணா ஆசிரமத்தில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாட்டார் இளையராஜா. இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.
இளையராஜா - எஸ்.பி.பி., கூட்டணியில் ஆயிரக்கணக்கான பாடல்கள் வெளியாகின. தங்களுக்குள் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை எல்லாண் தாண்டி அவர்களுக்குள் ஆழமான நட்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.