விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு |
பொதுவாக எந்த படமாக இருந்தாலும் அதில் ஒரு சிறிய செட்டாவது போடப்பட்டிருக்கும். ஒரு குக்கிராமத்தில் நடக்கிற கதையாக இருந்தாலும் குடிசை செட் போடுவார்கள். காரணம் நிஜ குடிசையில் படம் எடுக்கிற அளவிற்கு விஸ்தாரம் இருக்காது. இந்த நிலையில் அனுஷ்கா, மாதவன் நடிப்பில் வருகிற 2ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் ‛சைலன்ஸ்' (நிசப்தம்) எந்த செட்டும் போடாமல் எடுக்கப்பட்ட படம் என்கிறார் அதன் இயக்குனர் ஹேமந்த்த மதுக்கர். அவர் மேலும் கூறியதாவது:
முழு படமுமே அமெரிக்கா, சியாட்டலின் புறநகரில் உள்ள உண்மையான இடங்களில் எந்த செட்டும் அமைக்கப்படாமல் படமாக்கப்பட்டது படத்தில் காட்டப்பட்டுள்ள சில போலீஸ்காரர்கள் கூட படத்தின் படப்பிடிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையான போலீஸ்காரர்கள்தான். முழு படத்தையும் ஒரே ஷெட்யூலில் 56 நாட்களில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் படமாக்கினோம் .
செவித்திறன் குறைந்த மற்றும் வாய்பேசமுடியாத திறைமையான ஓவியக் கலைஞரான சாக்ஷி (அனுஷ்கா), எதிர்பாராத விதமாக பேய் இருப்பதாக நம்பப்படும் ஒரு பங்களாவில் நிகழும் மோசமான சம்பவத்தை பார்த்ததால் அதன் விசாரணையில் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாக சொல்லும் படம். என்றார்.