Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயற்கையின் சாபம்தான் கொரோனா: எஸ்.பி.பியின் கடைசி பேச்சு

26 செப், 2020 - 17:27 IST
எழுத்தின் அளவு:
S.P.BALASUBRAMANIYAM-LAST-SPEECH-IN--STAGE

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் கடைசி பேச்சு என்பது அவர் மருத்துவமனையில் சேர்ந்த அன்று அவர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் "எனக்கு சற்று உடல்நலக்குறைவு அதனால் மருத்துவமனைக்கு வந்திருக்கிறேன். எனக்கு அமைதியும், தனிமையும் தேவைப்படுகிறது. அதனால் என்னை யாரும் தொலைபேசியில் அழைக்க வேண்டாம்" என்று கூறியிருந்தார்.


அவர் கலந்து கொண்ட கடைசி இசை நிகழ்ச்சி என்பது கொரோனா ஊரடங்கு காலத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தினமும் ஆன்லைனில் பாடி நிதி திரட்டி வந்தார். இதன் ஒரு பகுதியாக டோக்கிய தமிழ் சங்கம் மற்றும் மவுனராகம் இசை குழுவின் சார்பில் ஆன் லைனில் இசை கச்சேரி நடத்தப்பட்டது.


சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் நடந்து வந்த இந்த நிகழ்ச்சியின் 100வது நாளில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசியதுதான் அவரது கடைசி மேடை பேச்சு. மரணத்தை எதிர்பார்த்து பேசியது போன்று பேசி இருக்கிறார்.


அந்த பேச்சு வருமாறு: எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்று யாருக்கும் தெரியாது. நிறைய விஷயங்களுக்கு நான் சாட்சியாக இருந்திருக்கிறேன். ஸ்டூடியோ ரிக்கார்ட்டிங், டிராக் ரிக்கார்டிங் இன்றைக்கு ஆன்லைன் ரிக்கார்டிங் வரைக்கும் பார்த்து விட்டேன். ஆடியன்ஸ் எதிர்ல இருக்காங்கன்னு கற்பனை பண்ணிக்கொண்டு பாடுகிற அனுபவத்தையும் பெற்று விட்டேன். இந்தியா முழுக்க உள்ள இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். உலகம் முழுக்க இசை நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறேன்.


எனக்கு பிறகு வருகிறவர்களுக்கு இன்னும் என்னென்ன அனுபவம் வரப்போகிறது என்று தெரியவில்லை. ஆர்கெஸ்ட்ரா ஒரு ஊர்ல இருக்கும், பாடுறவர் ஒரு ஊர்ல இருப்பார். இதெல்லாம் நடக்கும். வேற வழி கிடையாது.


கொரோனா பற்றி தப்பா பேசத் தேவையில்லை. அதை ஒரு கொடூரன், ராட்சஷன் என்று சொல்ல வேண்டாம். அது ஒரு சாபம். நம்ம செஞ்ச தப்புக்கு சாபம். இயற்கையை மிகவும் வஞ்சனை பண்ணிட்டோம். இயற்கை தாய்க்கு கொடுக்க வேண்டிய மரியாதை நாம் கொடுக்கவில்லை. நம்ம பெரியவர்கள் அழகாக பூமி, அழகான காற்று, அழகான தண்ணீர் எல்லாம் நமக்கு கொடுத்தாங்க. நாம ஒரு சுடுகாடு மாதிரியான இடத்தை அடுத்த தலைமுறைக்கு கொடுக்கிறோம். இது என்ன நியாயம். இதன் பலனை நாம் அனுபவதித்தே ஆகணும்.


யாரும் ஊரே யாவரும் கேளிர் அதுதான் இப்போது வேண்டும். என் ஜாதி, என் கலர், என் ஆளு, என் ஊரு, என் தேசம் என்பதல்லாம் சாதாரண மனிதர்கள் பேசுவது. புத்திசாலிகள் எல்லாமே ஒண்ணுதான்னு சொல்வாங்க. நம்ம கிட்ட ஜாஸ்தியா இருந்தா பகிர்ந்துக்கலாம். இல்லியா மற்றவங்களுக்கு தீங்கு செய்யாமலாவது இருக்கலாம்.


கடவுளோட கடாட்சம், குரு கடாட்சம் இருந்ததால்தான் என்னால் பாட முடிந்தது. நான் செய்த புண்ணியமோ என்னவோ இன்னும் பாடக்கூடிய சக்தியும், ஆசீர்வாதமும் எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ரசிகர்கள். அவர்கள் வளர்த்த பையன் நான். அவர்கள் ஆதரவு இல்லாமல் என்னால் எதுவுமே செய்ய முடியாது.


எனது வீடு, எனது நாடு என்று வாழ்வது வாழ்க்கையா. நான்கு சுவர்களுக்குள்ளே கைதியாக இருப்பது வாழ்க்கையா. இப்போது கைதியாகத்தான் இருக்கிறோம் வேறு வழியில்லை. உலகம் வேறல்ல, தாயும் வேறல்லா எல்லாம் ஒன்றுதான். உலகம் எல்லாம் சாப்பிடும்போது நாமும் கொஞ்சம் சாப்பிடுவோம். உலகம் எல்லாம் சிரிக்கும்போது நாமும் கொஞ்சம் சிரிப்போம். இதுதான் எனது முக்கியமான கொள்கை. எல்லோரும் ஒரு வாய் சாப்பிடணும் அதுதான் ரொம்ப முக்கியம்.


இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஜாதி மல்லி பூச்சரமே... சங்கத் தமிழ் பாச்சுரமே... என்ற பாடலை பாடினார். இதுவே அவர் மேடையில் பாடிய கடைசி பாடல் ஆனது.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
அசையாமல் இருக்கும் பாலுவை பார்க்க என் மனம் தாங்காது - கே.ஜே.யேசுதாஸ்அசையாமல் இருக்கும் பாலுவை பார்க்க ... ஷெட் போடாமல் படமாக்கப்பட்ட ‛சைலன்ஸ்' ஷெட் போடாமல் படமாக்கப்பட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Sri,India - India,இந்தியா
28 செப், 2020 - 06:54 Report Abuse
 Sri,India இவரைபொன்ற நல்ல பண்பும் திறமையும் உள்ளவர்கள் கிடைப்பர்களா??
Rate this:
LAX - Trichy,இந்தியா
27 செப், 2020 - 17:44 Report Abuse
LAX உண்மையான.. உன்னதமான வார்த்தைகள்.. உன்னதமான வார்த்தைகளே பாடல் வரிகளாய்.. 👍🏽 🙏🏽
Rate this:
P.Senthilprabhu - coimbatore,இந்தியா
27 செப், 2020 - 10:07 Report Abuse
P.Senthilprabhu உயர்ந்த உள்ளத்தின் உத்தமமான கருத்து. எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன் உங்களது அவா அத்தனையும் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன்... இயற்கையை மீட்க முயற்சி எடுப்போம் . மனித இனமே நம் ஆறு அறிவை சற்று வளர்த்து எடுப்போம் இயற்கை தாயிடம் இருந்து...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in