Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அசையாமல் இருக்கும் பாலுவை பார்க்க என் மனம் தாங்காது - கே.ஜே.யேசுதாஸ்

26 செப், 2020 - 17:17 IST
எழுத்தின் அளவு:
KJ-Yesudas-condolence-to-SPB

பின்னணி பாடகர்கள் கே.ஜே.யேசுதாசும், எஸ்.பி.பாலசுப்ரமணியமும் அண்ணன் தம்பிகளாக பழகினர் என்பது அனைவருக்கும் தெரியும். "எங்களது நட்பு ஜென்மம் ஜென்மமாக தொடரக் கூடியது" என்பார் யேசுதாஸ். "இருவரும் கச்சேரிகளில் ஒரே மைக்கில் பாட துவங்கியபோது நட்பு அதிகமானது. அது அழகான பந்தம். சகோதரரைவிட அதிகம் நேசிக்கிறேன்" என்பார் எஸ்.பி.பி. இந்நிலையில் எஸ்.பி.பி. மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் யேசுதாஸ்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், "என்னுடன் சக வேலை செய்யும் நண்பர்களில் பாலு என்னுடைய உடன்பிறந்தவர் போன்றவர். பாலு என்னை இவ்வளவு நேசித்தார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அண்ணா என்று கூப்பிடும் பொழுது ஒரு அம்மா வயற்றில் பிறக்கவில்லை ஆனால் ஒரு கூட பிறந்தவர் போல பழகியவர். முன் ஜென்மத்தில் நானும் எஸ்பிபி.,யும் சகோதர்களாக இருந்திருக்கலாம். பாலு முறையாக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் அவருடைய சங்கீத ஞானம் பெரிய அளவில் இருக்கும். பாட்டு பாடவும் செய்வார், உருவாக்கவும் செய்வார்.

சங்கராபரணம் என்ற படத்தில் முறையாக சங்கீதம் கற்றவருக்கு இணையாக பாடியிருப்பார் அதை கேட்டால் யாரும் இவர் சங்கீதம் கற்கவில்லை என கூறமாட்டர்கள். இரண்டு பேருடைய குடும்பமும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். சிகரம் படத்தில் பாடிய அகரம் இப்போ சிகரம் ஆச்சு என்ற பாடல் பாலு எனக்கு பரிசாக பாடினேன் என்று கூறினார். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. யாரையும் புண்படுத்தமாட்டார். கூட இருக்கும் எல்லோரையும் அன்பாகவும் ஆதரவாகவும் பார்த்துக்கொள்வார்.

பாரிஸில் நங்கள் தங்கிய போது சாப்பாடு கிடைக்கவில்லை, அப்பொழுது பாலு ரூம் சர்வீஸ் என குரல் மாற்றி கிண்டல் செய்தார் பின்பு அனைவர்க்கும் அவரே சமைத்து பகிர்ந்தார். அவ்வளவு பசியில் அந்த சாப்பாடு ருசியாக இருந்தது எல்லோரும் வயிறார சாப்பிட்டோம். நாங்கள் கடைசியாக பாடியது ஒரு சிங்கப்பூர் ப்ரோக்ராம்மில் தான். பாலு நோய் குணமாகி எப்போ வீடு திரும்புவார் என நான் அமெரிக்காவில் காத்துக்கொண்டிருந்தேன் இந்த கொரோனாவால் நமக்கு ஒரு பெரிய இழப்பு நடந்துள்ளது.

நான் அமெரிக்காவில் இருந்து இங்கே வர அனுமதி இல்லை. என்னால் அவரை பார்க்க முடியவில்லை என ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும், மேடையில் பாலுவும் நானும் ஒரு ஓரமாக சிரித்துக் கொண்டிருப்போம் அப்படி பார்த்துவிட்டு, அசையாமல் இருக்கும் பாலுவை பார்க்க என் மனம் தாங்காது. என்றும் அவர் நினைவுகளுடனே இருப்பேன்".

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரணியத்தின் கடைசி பாடல்இளையராஜா இசையில் ... இயற்கையின் சாபம்தான் கொரோனா: எஸ்.பி.பியின் கடைசி பேச்சு இயற்கையின் சாபம்தான் கொரோனா: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in