Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நெஞ்சம் பதறுகிறது : எஸ்பிபி மறைவுக்கு நயன்தாரா இரங்கல்

26 செப், 2020 - 16:56 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-condolence-to-SPB

திரையுலகை பொறுத்தவரை அனைத்து நடிகர்களுக்கும் தனது குரலை இரவல் கொடுத்து, தனது பாடல்களால் அவர்களை புகழ்பெற செய்தவர் தான் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவர் பாடிய அந்த பாடல்களில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு பெற்ற நடிகைகளும் கூட பாக்கியசாலிகள் தான்.. அந்தவிதமாக எஸ்.பி.பியின் மறைவிற்கு கொஞ்சம் தாமதமாக என்றாலும், தனது மனம் உருக, இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது : “தெய்வீக குரல் இனி இல்லை என்பதை நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது.. தலைமுறைகளை தாண்டி நம்மை மகிழ்வித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாருடைய குரல் நம்முடைய எல்லா காலங்களுக்கும் காரணங்களுக்கும் பொருந்தியிருக்கும்.. நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. ஆயினும் உங்கள் குரல் என்றென்றும் நீங்கா புகழுடன் இருக்கும்..

உங்களுக்கு அஞ்சலி செலுத்தி, எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்லிக்கொள்ளும் இந்த நேரத்தில் கூட, உங்கள் பாடல் மட்டுமே பொருந்துகிறது. எங்கள் வாழ்வில் உங்களின் ஆளுமை அப்படி.. நீண்ட காலமாக இடைவிடாமல் உழைத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு, மனமில்லாமல் பிரியாவிடை கொடுக்கிறோம். பாடும் நிலா விண்ணிலிருந்து பாடட்டும்.. உங்களைப் பிரிந்து வாழும் உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், உங்கள் திரையுலக சகாக்களுக்கும், உலகெங்கும் பரவியிருக்கும் உங்கள் எண்ணற்ற ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த ஆறுதல் செய்தி இது” என்று அதில் கூறியுள்ளார் நயன்தாரா

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எஸ்பிபி - இயல்பான நடிகரும் கூட....எஸ்பிபி - இயல்பான நடிகரும் கூட.... ஜெயலலிதாவுடன் இணைந்து பாடிய எஸ்பிபி ஜெயலலிதாவுடன் இணைந்து பாடிய எஸ்பிபி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in