Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்பிபி - இயல்பான நடிகரும் கூட....

26 செப், 2020 - 16:14 IST
எழுத்தின் அளவு:
SPB-Dead-:-Not-only-Loss-for-music-as-an-actor-too

எஸ்பி பாலசுப்ரமணியம் மறைவு இந்தியத் திரையுலகத்திற்கே பெரும் இழப்பு என பலரும் தவித்து வருகிறார்கள். அவருடைய நினைவு என்றென்றும் ரசிகர்கள் மனதில் இருக்கும். அவர் ஒரு சிறந்த பாடகர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதே சமயம் அவர் ஒரு சிறந்த இயல்பான நடிகரும் என்பதை நாம் நினைவு கூற வேண்டும்.

ஒரு சில தெலுங்கு, தமிழ்ப் படங்களில் ஒரு 'கேமியோ' கதாபாத்திரங்களில் வந்து போயிருந்தாலும் கே.பாலசந்தர் இயக்கத்தில் 1987ல் வெளிவந்த 'மனதில் உறுதி வேண்டும்' என்ற படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமானார்.

அதன் பின் அவ்வப்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். 1989ல் வந்த 'கேளடி கண்மணி' படத்தில் கதாநாயகனாக நடித்தார். 285 நாட்கள் ஓடிய படம் அது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்கள் ஓடும் அளவிற்கு ஓடி பெரிய வெற்றி பெற்ற படம்.

அதன்பின் 1991ம் ஆண்டில் 'சிகரம்' படத்திலும் கதாநாயகனாக நடித்து படத்திற்கு இசை அமைப்பையும் செய்தார். ஆனால், படம் வெற்றி பெறவில்லை. இருப்பினும் அவரது இசையில் வந்த பாடல்கள் இன்றும் ரசிக்கப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் 1994ல் வெளிவந்த 'காதலன்' படத்தில் பிரபுதேவா அப்பாவாக நடித்தார். அதில் அப்பா, மகன் இருவரும் ஒன்றாக அமர்ந்து தண்ணியடித்த காட்சி அப்போது பல இளைஞர்களை ஏங்க வைத்த ஒன்றாக இருந்தது. இப்படியெல்லாம் கூட அப்பா இருப்பார்களா என ஆச்சரியப்பட்ட காட்சி அது.

1995ல் வெளிவந்த 'பாட்டுப்பாடவா' படத்திலும் கதாநாயகனாக நடித்தார் எஸ்பிபி. அப்படமும் பெரிய வெற்றி பெறவில்லை. ஆனாலும், அவருடைய நடிப்பு பேசப்பட்டது.

1997ல் வெளிவந்த 'உல்லாசம்' படத்தில் அஜித்தின் அப்பாவாகவும், 2000ல் வெளிவந்த 'பிரியமானவளே' படத்தில் விஜய்யின் அப்பாவாகவும் நடித்திருக்கிறார் எஸ்பிபி.

தமிழ் தவிர தெலுங்கு, கன்னடப் படங்கள் சிலவற்றிலும் நடித்திருக்கிறார். டிவி தொடர்களிலும் நடித்திருக்கிறார். இசை சார்ந்த பல டிவி நிகழ்ச்சிகளுக்குச் சென்று அங்கு புதிய திறமைசாலிகளை ஊக்கப்படுத்தும் விதத்தில் அவர்களை வாழ்த்தி இருக்கிறார்.

கமல்ஹாசன் நடித்த படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்படும் போது அவருக்குப் பின்னணி குரல் கொடுத்தவர் எஸ்பிபி. கமல்ஹாசனே சொந்தக்குரலில் பேசினால் கூட அது கமல்ஹாசன் குரலில்லை என்று சொல்லுமளவிற்கு நான் அவருக்காகப் பேசியிருக்கிறேன் என்று சொன்னவர் எஸ்பிபி.

ஒரு பாடகர் பல மொழிகளில் பாடி சாதனை புரிந்திருந்தாலும், படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து நடிகராகவும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் என்பது பெருமையான ஒரு விஷயம். ஒரு பாடகரை இழந்தது போல ஒரு நடிகரையும் திரையுலகம் இழந்துவிட்டது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கைதாகிறாரா மீரா மிதுன்?கைதாகிறாரா மீரா மிதுன்? நெஞ்சம் பதறுகிறது : எஸ்பிபி மறைவுக்கு நயன்தாரா இரங்கல் நெஞ்சம் பதறுகிறது : எஸ்பிபி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in