மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
சமூக வலைத்தளங்கள் முழுவதும் நேற்று மதியம் முதல் எஸ்பிபி என்ற மூன்றெழுத்தே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அவர் மறைவுச் செய்தி கேட்டதுமே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழி சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களைப் பதிவு செய்தனர்.
கொரானோ தொற்று காலமாக இருப்பதால் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தக் கூட பல சினிமா பிரபலங்கள் செல்ல மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருப்பினும் நேற்றே சில சினிமா பிரபலங்கள் அவரது வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று தாமரைப்பாக்கத்தில் நடந்த இறுதிச் சடங்கில் நடிகர்கள் விஜய், அர்ஜுன், ரகுமான், வைபவ், மயில்சாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இன்று காலை வரையிலும் விஜய், அஜித் எந்தவொரு இரங்கலும் தெரிவிக்கவில்லை என்ற செய்தி பல ஊடகங்களில் வெளிவந்தது. ஆனால், தாமரைப்பாக்கத்திற்கே சென்று எஸ்பிபிக்கு இறுதி அஞ்சலி செலுத்தி அவரது மகன் எஸ்பிபி சரணுக்கு ஆறுதல் கூறினார் நடிகர் விஜய்.
ஆனால், அஜித் சினிமாவில் முதன் முதலில் நடிகராக அறிமுகமாகக் காரணமாக இருந்த எஸ்பிபிக்கு ஒரு இரங்கல் தெரிவிக்கவோ, அல்லது நேரில் கூட அஞ்சலி செலுத்தவோ அஜித் செல்லாததன் காரணம் தெரியவில்லை.
இத்தனைக்கும் எஸ்பிபி மகன் சரணும், அஜித்தும் பள்ளி காலத்திலிருந்தே நண்பர்கள். சிறு சிறு விளம்பரங்களில் நடித்து வந்த அஜித்தை 'பிரேம புஸ்தகம்' என்ற தெலுங்குப் படத்தில் நாயகனாக நடிக்க வைக்க அந்தத் தயாரிப்பாளருக்கு அஜித்தை அறிமுகப்படுத்தியவர் எஸ்பிபி. விளம்பரப் படங்களில் நடிக்கும் போது கூட சரணின் உடைகள் மற்றும் ஷுவைத்தான் அணிந்து செல்வாராம் அஜித்.
இந்தத் தகவலை எஸ்பிபியே ஒரு டிவி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். அஜித் நேரில் கூட வந்திருக்க வேண்டாம், ஒரு இரங்கல் அறிக்கையாவது கொடுத்திருக்கலாமே என்பதுதான் பலரது ஆதங்கமாக உள்ளது.