Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்.பி.பி.,யின் பெருந்தன்மை: பெங்காலி இசையமைப்பாளர் பெருமிதம்

26 செப், 2020 - 11:45 IST
எழுத்தின் அளவு:
Debojyoti-mishra--condolence-to-SPB

மீண்டு வந்துவிடுவார் என அனைவரும் நம்பிக்கையில் இருந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக ரசிகர்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தி சென்றுவிட்டார் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இந்தநிலையில் பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருவதுடன், அவருடனான தங்களது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.


தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தி உட்பட இன்னும் சில மொழிகளிலும் பாடியுள்ளார் எஸ்.பி.பி., அந்தவகையில் பிரபல பெங்காளி இசையமைப்பாளர் டிபோஜோதி மிஸ்ரா என்பவர் எஸ்.பி.பி. குறித்த தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.


“எஸ்.பி.பி. நான் இசையமைத்த படம் ஒன்றுக்கு ஆறு பாடல்களையும் பாடி தந்தார். அதற்காக தனக்கு இருந்த மற்ற வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, என் பட வேலைகளை முடித்து கொடுத்தார். எஸ்.பி.பி.க்கு மிகப்பெரிய ஸ்டுடியோ ஒன்று இருக்கிறது என்று பலருக்கும் தெரியாது. அந்த ஸ்டுடியோவில் எங்கள் படங்களின் பணிகளுக்காக வரும்போது என்னை சந்தித்து உரையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார் எஸ்.பி.பி.” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் டிபோஜோதி மிஸ்ரா.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தாமரைப்பாக்கம் சோலையில் துயில் கொண்ட எஸ்.பி.பி. - அரசு மரியாதையுடன் நல்லடக்கம்தாமரைப்பாக்கம் சோலையில் துயில் ... எஸ்.பி.பி., இறுதிச்சடங்கில் நடிகர் விஜய் பங்கேற்று மரியாதை எஸ்.பி.பி., இறுதிச்சடங்கில் நடிகர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Bhaskaran - Chennai,இந்தியா
27 செப், 2020 - 13:25 Report Abuse
Bhaskaran அஸ்ஸாமிய பாடகர் பூபன் ஹசாரிக்காவுக்கு பாரத ரத்னம் விருது வழங்கிய மத்திய அரசு avarai vida அதிகம் தகுதிப்படைத்த பாடகரும் மனித நேயருமான பாலுவுக்கு கண்டிப்பாக வழங்கவேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in