Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தாமரைப்பாக்கம் சோலையில் துயில் கொண்ட எஸ்.பி.பி. - அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

26 செப், 2020 - 11:02 IST
எழுத்தின் அளவு:
SPB-Funeral-happend

சென்னையை அடுத்த செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.பியின் பண்ணை வீட்டில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக ஏராளமான பொதுமக்கள் நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பாட்டுத்தலைவனாக சிகரம் தொட்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(75). தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடிய எஸ்.பி.பி., கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மெல்ல முன்னேற்றம் கண்டு கொரோனா நெகட்டிவ் என வந்த பிறகு அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் நேற்று(செப்., 25) காலமானார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்பு, சென்னையை அடுத்த செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக நுங்கம்பாக்கம் முதல் தாமரைப்பாக்கம் வரை வழிநெடுக மக்கள் அவருக்கு கண்ணீருடன் மலர்களால் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து இன்று(செப்., 26) அவரது பண்ணை வீட்டில் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், நடிகர்கள் விஜய், ரகுமான் உள்ளிட்ட பல திரைக்கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னணி பாடகர் மனோ, எஸ்.பி.பி.யின் உடலை பார்த்து கதறி அழுதது அங்கிருந்தவர்களையும் கண்கலங்க செய்தது. ஆந்திர அரசின் சார்பில் அமைச்சர் ஒருவர் அஞ்சலி செலுத்தினார்.

பின்பு எஸ்.பி.பி.,க்கு அவர்களது குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்ரி, தங்கை சைலஜா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.பின் போலீஸ் மரியாதை அணிவகுப்புடன் எஸ்.பி.பி., உடல் அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. 24 குண்டுகள்(3 ரவுண்ட்) முழங்க அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் பாண்டியராஜன் இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.

பாட்டுத்தலைவனாக சிகரம் தொட்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். காலையில் சுப்ரபாதமாக, மாலையில் துள்ளல் டிஸ்கோ கீதங்களாக, இரவில் நிம்மதியாக உறங்க தாலாட்டு பாடலாக வீட்டுக்கு வீடு கேட்டுக் கொண்டே இருக்கும் பாலுவின் பாட்டு. கற்கண்டு குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் உயிரில் கலந்தவர். இவரது சாகாவரம் பெற்ற பாடல்கள், காற்றில் கலந்து உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என அவர் பாடி சென்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அவரின் பாடல்கள் என்றும் மக்களின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

பலரை பாடி உறங்க வைத்த இந்த பாடும் நிலா, இப்போது அமைதியாய் அவரது தாமரைப்பாக்கம் சோலையில் நிரந்தரமாய் துயில் கொள்ள சென்றுவிட்டது.Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
எஸ்பிபி மறைவு - இரங்கல் தெரிவிக்காத விஜய், அஜித்எஸ்பிபி மறைவு - இரங்கல் தெரிவிக்காத ... எஸ்.பி.பி.,யின் பெருந்தன்மை: பெங்காலி இசையமைப்பாளர் பெருமிதம் எஸ்.பி.பி.,யின் பெருந்தன்மை: பெங்காலி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
27 செப், 2020 - 08:44 Report Abuse
Bala Murugan ஜெயலலிதா வின் இறப்பு இயற்கையானது இல்லை. அதே நிலைமை தான் எஸ்பிபி அவர்களுக்கும் நடந்து இருக்கிறது. உண்மையில் கொரோனா அவருக்கு கிடையாது. அவருக்கு உடல் உபாதைகள் பல இருந்திருக்கின்றன. அவற்றை சமாளித்துக் கொண்டும் மருந்து எடுத்துக்கொண்டும் வாழ்ந்திருக்கிறார். உயிர் காக்கும் சிகிச்சை என்று சொல்லி பலவற்றை செய்து (ஜெயலலிதா அவர்களுக்கு செய்தது போல) உடல் தாங்க முடியாமல் இறந்து விட்டார். இதனை மறைக்கவும் மருத்துவமனை ஊழியர்களை காக்கவும் வேறு விதமாக செய்தி சொல்லி அரசு மரியாதையுடன் துப்பாக்கி முழங்கி இறுதி சடங்கு செய்து அரசு தன்னையும் காத்துக்கொண்டது.
Rate this:
Sheela Ramanan, san antonio, usa - San Antonio ,யூ.எஸ்.ஏ
27 செப், 2020 - 07:10 Report Abuse
Sheela Ramanan, san antonio, usa ஒவ்வொரு (கண்ணீர்) துளியிலும் உன் முகம் தெரிகிறது நீரின்றி அமையாது உலகு- இன்று நீர் இன்றி? சுப்ரபாதத்தில் எழுப்பி- உன் தாலாட்டில் உறங்கச் செய்தவரே யாரைய்யா நீர்? யார் யாரோ எழுதிய கவிதைகளுக்கு உயிர் கொடுத்த பிரம்மனைய்யா நீர் காதலை தென்றலாய் காமத்தை நாசூக்காய் நட்பை நாகரீகமாய் பாசத்தை பக்தியாய் பதின் வயதிலேயே பதவிசாய் சொல்லிக் கொடுத்த நீர்-நம் உறவு, பிரிவென்ற சொல்லே அறியாதது என பெரிய பொய் கூறிவிட்டீரே உயிரில் கலந்து உணர்வில் மிகுந்து ஒவ்வொரு அணுவிலும் பரவிய வைரஸ் ஐயா நீர் இன்று பல காதல் உயிரோடு இருக்க நீர் தானே காரணம் உமது பாடல் இல்லாத வீடு,கோவில்,காடு,மலை இனி என்னாகும்? பல நூறு ஆண்டுகள் இந்த மண்ணில் காற்றாய் மழையாய் அணுவாய்- நீர் வாழ்வீர் நான் மறைந்தாலும். -ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, அமெரிக்கா
Rate this:
thonipuramVijay - Chennai,இந்தியா
26 செப், 2020 - 23:42 Report Abuse
thonipuramVijay அழுவது மரியாதை செய்து இப்போது என்ன பயன், உண்மை யாருக்கும் புரிவதில்லை. சளி காய்ச்சலுடன் மருத்துவமனைக்கு சென்றார். இப்போது சிகிச்சை என்ற பெயரில் கொல்லப்பட்டுள்ளார். எஃமோ சிகிச்சை செய்தாள் இரத்தக்கசிவு உடலில் எங்கு வேண்டுமாணாலும் வரலாம் , இதய அடைப்பு ஏற்படலாம் என்றிருக்கும் போது, எதற்கு இப்படி உடலை ரணப்படுத்தும் சிகிச்சை? சித்தா வில் நூறு சதம் பயிருக்கும் போது ஏன் இந்த ஆங்கில சிகிச்சை முறை? MGR, JJ இப்போது spb அவர்கள் . இன்னும் எத்தனை பேரை ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in