Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்.பி.பி.க்கு வழிநெடுக மலர் தூவி மக்கள் அஞ்சலி - அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு

25 செப், 2020 - 22:29 IST
எழுத்தின் அளவு:
People-pay-respect-to-SPB

சென்னை: தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி.,பாலசுப்பரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(75), கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அந்த நோயுடன் போராடி, நன்கு உடல்நிலை தேறி வந்த நிலையில், மாரடைப்பால் இன்று (செப்.,25) காலமானார்.

மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கம், காம்தார் நகரில் உள்ள எஸ்.பி.பி. வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். கொரோனா காலம் என்பதையும் தாண்டி அவருக்கு ஆயிரக்கணக்கான பேர் அஞ்சலி செலுத்த திரண்டனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத போலீசார், எஸ்.பி.பி. குடும்பத்தாரிடம் தெரிவிக்க, நாளை அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்ல முடிவெடுத்த நிலையில் இன்றே கொண்டு செல்ல முடிவெடுத்தனர். இதனால் பொது மக்கள் அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டது. பின் எஸ்.பி.பி., உடல் பிரத்யேக வாகனத்தில் ஏற்றப்பட்டு, செங்குன்றம் தாமரைபாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

நுங்கம்பாக்கத்தில் இருந்து தாமரைப்பாக்கம் வரை வழிநெடுக மக்கள் திரண்டு அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பலரும் மாலைகள் அணிவித்தனர். இன்னும் சிலரோ பூக்கள் தூவி அவருக்கு மரியாதை செலுத்தினர். கொரோனாவையும் தாண்டி எஸ்.பி.பி. மீது மக்கள் எவ்வளவு நன்மதிப்பை வைத்துள்ளனர் என்பதை இது காட்டுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எல்லா கதாநாயகர்களுக்கும் பொருந்திய எஸ்.பி.பி., குரல்எல்லா கதாநாயகர்களுக்கும் பொருந்திய ... சபரிமலையில் டோலி தூக்குவோர் காலை தொட்டு வணங்கிய எஸ்.பி.பி சபரிமலையில் டோலி தூக்குவோர் காலை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in