Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆன்சர் பேப்பரை அழிச்சிட்டாங்க: சென்னை பல்கலைக்கழகம் மீது நடிகை அபிராமி புகார்

25 செப், 2020 - 13:39 IST
எழுத்தின் அளவு:
Actress-Abirami-complaint-about-Chennai-University

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் அபிராமி வெங்கடாச்சலம். அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை, களவு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். அபிராமி சென்னை பல்கலைகழகத்தில் நடனப் படிப்பில் முதுகலை பட்டத்துக்கு படித்து வருகிறார். தற்போது இதன் தேர்வு ஒன்றை ஆன்லைனில் எழுதி உள்ளார். அவர் எழுதி அனுப்பிய பதில்தாள் (ஆன்சர் பேப்பர்) அழிந்து விட்டதாகவும் அதனால் மறு தேர்வு எழுத வேண்டும் என்றும் பல்கலைகழகம் கூறியுள்ளது.


இது தொடர்பாக அபிராமி இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நான் எம்.ஏ., டான்சிங் படித்து வருகிறேன். எனது வருகை பதிவேடு சரியாக இருக்கிறது. தேர்வு கட்டணத்தை உரிய காலத்துக்குள் செலுத்தி இருக்கிறேன்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் தேர்வு நடத்தினார்கள். அந்த தேர்வுக்காக நான் தயாராகி லேப் டாப் முன் காத்திருந்தேன். காலை 10 தேர்வுக்கு நன்பகல் 2.30 மணிக்குதான் வினாத்தாளை அனுப்பினார்கள். ஆனால் அதற்கு முன்பே நான் என் தோழியிடம் வினாத்தாளை வாட்ஸ்அப்பில் வாங்கி பதில் எழுதி அதனை மெயில் மூலம் எனது துறைக்கு அனுப்பி விட்டேன்.


ஆனால் இப்போது நீங்கள் அனுப்பிய பதில்தாள் அழிந்து விட்டது. அதனால் மறு தேர்வு எழுதி இன்னொரு மெயில் ஐடிக்கு அனுப்புங்கள் என்று கூறுகிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே பல்கலைகழகத்தின் நடனத்துறை என்னை அவமானப்படுத்தி வருகிறது. போன் பண்ணினால் எடுப்பதில்லை. மெயில் அனுப்பினால் பதில் அனுப்புவதில்லை. இப்போது பதில்தாள் அழிந்து விட்டது என்கிறார்கள்.


ஒரு மாணவியின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள். எனது இன்ஸ்ட்ராகிராம் நண்பர்களுக்கு பல்கலைகழத்தில் யாரையாவது தெரியும் என்றால் அவர் மூலம் எனக்கு உதவுங்கள் என்று உருக்கமாக பேசி இருக்கிறார் அபிராமி.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கோவா சர்வதேச திரைப்படவிழா அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைப்புகோவா சர்வதேச திரைப்படவிழா அடுத்த ... எஸ்.பி.பி.யின் இசை பயணம் எஸ்.பி.பி.யின் இசை பயணம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Vijayalakshmi SPT - Chennai,இந்தியா
25 செப், 2020 - 23:08 Report Abuse
Vijayalakshmi SPT துணைவேந்தர், பதிவாளர் என்று யாரைத் தெரிந்தாலும் பிரயோஜனம் இல்லை என்பது எனது தெளிவான கருத்து. இப்போது நடக்கும் online தேர்வுகளெல்லாம் பரிசோதனை முயற்சி என்பதால் ... சுமூகமாக போவதுதான் சுகம்.
Rate this:
25 செப், 2020 - 17:14 Report Abuse
Prasanna Krishnan Abhi darling just relax. God is there with you. You will get a favorable reply.
Rate this:
Santi -  ( Posted via: Dinamalar Android App )
25 செப், 2020 - 17:02 Report Abuse
Santi மெயில் மூலம் அனுப்பியிருந்தால், உங்கள் Sent items இருக்குமே. உங்கள் answer ஸ்கிரிப்ட் மீண்டும் அவர்களுக்கு மெயில் அனுப்பலாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in