பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா நோய் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நிலை நன்கு முன்னேற்றம் அடைந்து திரவ உணவு எடுத்து வந்த நிலையில் நேற்று முதல் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. மருத்துவமனையையும் அவரது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் இந்த தகவல் அறிந்தவுடன் நேற்று கமல்ஹாசன் மருத்துவமனை சென்று எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் நலமாக இருக்கிறார் என கூற முடியாது என்றார்.
இந்நிலையில் இன்று காலையில் எஸ்.பி.பியின் மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் மருத்துவமனை வந்தனர். அந்தசமயம் இயக்குனர் பாரதிராஜாவும் மருத்துவமனை வந்தார். மருத்துவமனையில் வெளியே வரும் செய்தியாளர்களை சந்தித்த பாரதிராஜா, "சில சூழ்நிலைகளில் வார்த்தைகள் வராது. எஸ்.பி.பி. மீண்டு வருவார் என எல்லோரும் பிரார்த்தித்தோம், ஆனால், அது நடக்கவில்லை. நம்மை விட மேலான ஒரு சக்தி இருக்கிறது. இன்னும் சிறிது நம்பிக்கை இருக்கிறது. பாலு மாதிரியான ஒரு அற்புதமான மனிதரை பார்க்க முடியாது. துக்கத்தில் என்னால் பேச முடியவில்லை" என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
எஸ்.பி.பி., மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருந்தபோது பாரதிராஜா தலைமையில் தான் கூட்டுப்பிரார்த்தனை நடந்தது குறிப்பிடத்தக்கது.