‛மயோன் 2' உருவாகிறது | யானை படம் : பிரியா பவானி சங்கர் நம்பிக்கை | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கிர்த்தி ஷெட்டி | திருமணம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை : ஸ்ருதிஹாசன் | மதுரைக்கார இளைஞனாக மாறும் ஆர்யா | கமலுக்கு கோல்டன் விசா | பிரித்விராஜ் ஒரு கேரள கமல் : விவேக் ஓபராய் புகழாரம் | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை நாடும் கேரள அரசு | இயக்குனர் சங்கத்திற்காக ஒன்றிணையும் ஜீத்து ஜோசப் - பிரித்விராஜ் | மோகன்லாலுக்கு வில்லனாக மாறும் ஹரீஷ் பெராடி |
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் ராமராஜன், அதிலிருந்து மீண்டுள்ளார். இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை :
" சில நாட்களுக்கு முன்பு எனக்கு கொரோனாவின் தாக்கம் இருக்குமோ என்ற அய்யப்பாடு இருந்ததால் கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு மருத்துவர்களும் செவிலியர்களும் மட்டுமல்ல அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணி புரிவதை கண்டேன். எனக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளித்தனர். உயர் தர சிகிச்சை அனைவருக்கும் அங்கு கிடைக்கிறது. இதற்காக முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஒ.பி.எஸ், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்து விட்டேன். இந்த இடைபட்ட நாட்களில் எனக்காக பிரார்த்தனை செய்து என் மீது அக்கறை கொண்டு தொலைபேசியிலும், அலைப்பேசியிலும், நேரிலும் நலம் விசாரித்த அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள், சக நடிகர் நடிகைகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக துறை நண்பர்களுக்கும், என் ரசிகபெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி" என தெரிவித்துள்ளார்.