மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்த் வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றார். ஆனால் அவருக்கு லேசான கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளது. இதனால் அவர் தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நலமாக இருப்பதாகவும், சீக்கிரம் குணமாகி அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் குணமாக வேண்டி அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரஜினி
விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவரது மைத்துனர் எல்.கே.சுதீஷிடம் போனில் நலம் விசாரித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
ராதாரவி
ராதாரவி கூறுகையில், எனது நீண்ட கால நண்பரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற செய்திக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர் பூரண நலம் பெற்றுத் திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன். விரைவில் அவர் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்புவார். இந்த தருணத்தில் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள். இன்னும் நாம் கொரோனாவிலிருந்து முழுமையாக மீளவில்லை. தயவு செய்து சமூகப் பொறுப்புடன் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள். அடிக்கடி கைகளைச் சுத்தமாக சோப்பு போட்டுக் கழுவுங்கள். கொரோனாவிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்வோம். என தெரிவித்துள்ளார்.
சரத்குமார்
"தேமுதிக தலைவரும், அருமை நண்பருமான விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என சரத்குமார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஹரிஷ் கல்யாண்
நிஜத்திலும், சினிமாவிலும் நிஜ போராளி. விஜயகாந்த் அவர்கள் சீக்கிரம் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன் என நடிகர் ஹரிஷ் கல்யாண் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.