பாரிஸ் ஜெயராஜ் டிரைலருக்கு வரவேற்பு | பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு! | காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு |
ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விசாரணை வழக்கு, அப்படியே திசை மாறி போதைப் பொருள் வழக்காகவும் மாறியது. அவரது காதலி ரியா சக்ரவர்த்தி, ரியாவின் சகோதரர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்த விவகாரம் அப்படியே மேலும் சில நடிகைகளை நோக்கித் திரும்பியுள்ளது. போதைப் பொருள் போலீசார் முன் நாளை வெள்ளிக்கிழமை விசாரணைக்காக ரகுல் ப்ரீத் சிங் ஆஜராக உள்ளார். இதற்காக ஐதராபாத்தில் தெலுங்குப்பட படப்பிடிப்பில் இருந்த ரகுல் அதை ரத்து செய்துவிட்டு மும்பை சென்றுள்ளார்.
ரகுல் ப்ரீத் பெயரை ரியா தான் விசாரணையில் தெரிவித்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்து தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஸ்ரத்தா கபூர் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்கள். சுஷாந்த் சிங் மானேஜர் ஜெயா சாஹாவின் வாட்சப் சாட் மூலம் தான் இந்த நடிகைகளை விசாரணைக்கு அழைத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
அவர்களிடம் விசாரணை மட்டும் நடைபெறுமா அடுத்து மேல் நடவடிக்கை இருக்குமா என்பது விசாரணைக்குப் பிறகே தெரிய வரும்.