Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நல்ல கருத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்: ஐஸ்வர்யா ராஜேஷ்

24 செப், 2020 - 14:15 IST
எழுத்தின் அளவு:
Any-one-can-says-good-idea-says-Aishwarya-Rajesh

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரகனி, ரங்கராஜ் பாண்டே நடித்துள்ள க.பெ.ரணசிங்கம் படம் வருகிற அக்டோபர் 2ந் தேதி ஓடிடி தளத்தில் வெளிவருகிறது. படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:

மக்களின் அடிப்படை பிரச்னையான தண்ணீர் பற்றி படம் பேசுகிறது. இதில் அரசியல் கலந்திருந்தாலும் முழுநீள அரசியல் படமல்ல. இந்த படத்தில் என் கணவர் ரணசிங்கம் கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் என்று எல்லோரும் கருதியதால் அவரிடம் கேட்டோம். அவரும் கதை பிடித்து நடிக்க ஒப்புக்கொண்டார். 10 நாள் கால்ஷீட் தந்தவர் 25 நாள் நடித்து கொடுத்தார்.

அவர்தான் படத்தின் மையபுள்ளி. அவர் விட்டுச் சென்ற பணிகளை நான் தொடர்வதாக கதை அமைப்பு. நான் ஒரு வளரும் ஹீரோயின். பெரிய ஹீரோக்கள் பேச வேண்டிய வசனத்தை, கருத்தை நான் பேசினால் மக்கள் கேட்பார்களா என்று கேட்கிறார்கள். நல்ல கருத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். கருத்துதான் முக்கியமே தவிர சொல்வது யார் என்பது முக்கியமல்லை.

ஓடிடியில் படம் பார்க்க 199 ரூபாய் கட்டணம் அதிகம் என்கிறார்கள். எனக்கு அப்படி தோன்றவில்லை. ஒரு குடும்பத்தில் உள்ள 5 பேர் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றால் குறைந்தது 1500 ரூபாயாவது செலவாகும். ஆனால் தற்போது 199 ரூபாயில் பார்க்க முடிகிறது. நல்ல படத்திற்கு மக்கள் எப்போதுமே ஆதரவு தருவார்கள். என்ன இருந்தாலும் தியேட்டர் அனுபவம் தான் உயர்வானது. தியேட்டர்கள் திறக்கும் நாளை நானும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். என்றார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
குருதி ஆட்டம் பணிகள் நிறைவு: ஓடிடியில் வெளிவருகிறது?குருதி ஆட்டம் பணிகள் நிறைவு: ... பிக்பாஸ் 4 - போட்டோக்களால் மாட்டிக் கொள்ளும் பிரபலங்கள் பிக்பாஸ் 4 - போட்டோக்களால் மாட்டிக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Sankar - Chennai,இந்தியா
25 செப், 2020 - 19:42 Report Abuse
Sankar Neevu Cheppu...Pampisthanu...
Rate this:
டூபாக்கூர் பொண்ணு சேனலுக்கு ஒரு காசு ... அதுல வரும் படத்தை பார்க்க ஒரு காசு .... தமிழ்படத்துக்கு ஒரு ரேட் இந்திக்கு ஒரே ரேட் ....தியேட்டர் போனா 1500 வீட்ல கம்மியாம் .. கரண்ட் .. டேட்டா எல்லாம் சும்மா வருதா ....ஹிந்தி மாலூம் ரே ...
Rate this:
Jay - Bhavani,இந்தியா
24 செப், 2020 - 23:05 Report Abuse
Jay முஜே ஹிந்தி மாலும்ரே.
Rate this:
Balaji K S - Citizen,இந்தியா
24 செப், 2020 - 14:59 Report Abuse
Balaji K S நல்ல கருத்தை யாரானாலும் கூறலாம்.... ஹிந்தி தெர்யாதுன்றது நல்ல கருத்தா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in