சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
100 படத்திற்கு பிறகு அதர்வா நடித்து வரும் படம் குருதி ஆட்டம். 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட படம் தற்போது ஒருவழியாக நிறைவடைந்திருக்கிறது. 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீகணேஷ் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இதில் அதர்வா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் இசை அமைத்துள்ளார்.
இதன் படப்பிடிப்புகள் முடிந்து கடந்த கொரோனா காலத்திற்கு முன்பு டப்பிங் பணிகள் தொடங்கியது. தற்போது ஊரடங்கு தளர்வின் காரணமாக டப்பிங் பணிகள் முடிந்து விட்டது. "நாங்கள் தயாராகிவிட்டோம். விரைவில் புதிய அறிவிப்புகள் வரும்" என்று தயாரிப்பு தரப்பு அறிவித்திருக்கிறது.
படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதில் அதர்வா கபடி விளையாட்டு வீரராகவும், பிரியா பவானி சங்கர் பள்ளி ஆசிரியையாகவும் நடித்திருக்கிறார். ஒரு குழந்தைக்காக கபடி வீரர் நடத்தும் போராட்டம்தான் கதை.